மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-40 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-40 (வரலாறு-பாகம்-2)


ஹுலுகங்கை மஸ்ஜித் 40
இயற்கை அழகு நிறைந்த ஹ{லுகங்கைப் பட்டினத்தின்  மத்தியில் சென். ஜோன்ஸ் தோட்டத்தின் ஒரு பகுதியோடு ஹ{லுகங்கை மஸ்ஜித் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்திய முஸ்லிம் வர்த்தகச் செல்வர்களது நினைவுச் சின்னமாக விளங்கும் மஸ்ஜிதின் வரலாறு 1900களையும் கடந்து செல்வதாகக் கூறப்படுவதுண்டு. சமீபத்தில் புனரமைப்புச் செய்யப்பட்ட மஸ்ஜித் பட்டினத்துக்கு அழகை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் இறை இல்லங்களில் ஒன்றாகக் காட்சியளிப்பதைக் காணலாம்.   

மையவாடி நிலமும் மஸ்ஜிதுடன் இணைந்ததாக அமைந்திருக்கின்றது. ஆரம்ப காலமுதல்  இந்திய வியாபாரிகளால் நிருவகிக்கப்பட்ட மஸ்ஜிதில் சமயப்பணியாளர்களாகவும் இந்திய சமூகத்தவர்களே விளங்கியுள்ளனர்.  மஸ்ஜிதின் உள்ளுர்ப்பணியாளர்களில்  உடத்தலவின்னை - கோணகலகெதரயைச் சேர்ந்த பெரியார் அப்துல் காதர் லெப்பை போற்றப்படவேண்டியவர். நீண்ட காலம் மஸ்ஜிதில் பணிபுரிந்த அன்னார் பட்டினத்தின் பிரபல சமய-சமூகசேவையாளராக விளங்கிய முஹம்மத் இஸ்மாயில்  ஹாஜியாரின்  தகப்பனாராவார். ஜனார் முஹம்மத் இஸ்மாயில்  அவர்களது புதல்வர் கனவான் அஹ்மத் ஹாஜா முஹிதீன் தற்போது மஸ்ஜித் நிர்வாக சபையின் ;தலைவராகப் பணிபுரிந்து வருகின்றார்.  

மஸ்ஜிதில் வருடா வருடம் “புர்தாக் கந்தூரி மஜ்லிஸ்” சிறப்பாக நிறைவேறி வருவதுடன் ரபீஉல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கது புகழ்பாடும் மௌலிது மஜ்லிஸும் இனிது நடைபெற்று வருகின்றது.

ஹுலுகங்கையின் கல்வி வரலாறு
பட்டினத்தின் பாடசாலைக்கல்வி வரலாறு 1958ம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகின்றது. கொஸ்கம சிங்கள மகாவித்தியாலயத்தில் இயங்கிய தமிழ்ப் பிரிவு மஸ்ஜிதின் தாழ்வாரத்தில் 1961.07.09 திகதி ஹ{லுகங்கை முஸ்லிம் வித்தியாலயம் என்ற பெயரில் தோன்றிற்று. 

அதன் முதலாவது அதிபராகப் பதிவ ஏற்றவர் உடத்தலவின்னையைச் சேர்ந்த ஜனாப் எம். எம். அஹ்மத் ஆவார். பாடசாலை அமைவிடத்துக்காக மூன்று ஏக்கர் நிலத்தை அன்பளிப்புச் செய்து வரலாறு படைத்தவர் கனவான் அப்துல் காதிர் லெப்பை அவர்களது குமாரர்  முஹம்மத் இஸ்மாயில் ஹாஜியார் (பி.1919-ம.1993) ஆவார். 

பிரதேசத்தின் கல்வி கலாசார வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்புச் செய்தவர்களில்  முஹம்மத் இஸ்மாயில் ஹாஜியார் குறிப்பிடப்;பட வேண்டியவர்.  மஸ்ஜிதின் வளர்ச்சியிலும் அதன் நிர்வாக செயற்பாடுகளிலும்  கனவான் அப்துல் காதர் லெப்பையின் குடும்பத்தவர்கது பங்களிப்பு அனைவராலும்  இன்றும் புகழ்ந்து பேசப்படுவதுண்டு. அவர்களுள்  பதினைந்து வருட காலமாகமத் தலைவராகப் பணிபுhந்த கனவான் அப்துல் பரீத் குறிப்பிட சுமாப்பட வேண்டியவர். 

சுமார்  நூற்றுக்கும. அதிகமான  மாணவர்கள் கல்வி கற்கும் ஹ{லுகங்கை முஸ்லிம் வித்தியாலயத்தில் ;பட்டினத்தைச் சுற்றி அமைந்திருக்கும் அரத்தன, அலகொல, ஹாகல போன்ற பகுதிகளிலிருந்து வருகை தரும் மாணவர்களும் கல்வியைத் தொடர்கின்றனர். சமீபத்தில் பட்டினத்தின் மத்தியில் தமிழ்ப் பாடசாலை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.  ஹ{லுகங்கை முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராக மடவலை பஸாரைச் சேர்ந்த ஏ. பீ. எம். இக்பால் பணிபுரிந்து வருகின்றார்.  குடியிருப்பின் முதலாவது ஆசிரியயையாக அஹ்மத் லெப்பை மரீனாவும், முதலாவது மௌலவியாக அப்துல் முத்தலிப் முஹம்மத் அனஸ் அவர்களும், முதலாவது அறபு மத்ரஸா உஸ்தாதாக மௌலவி வஹாப்தீன் தீனுல் இஸ்லாம் அவர்களும் போற்றப்படுகின்றனர்.
(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post