செந்தமிழ் தேன் மொழியாள்!

செந்தமிழ் தேன் மொழியாள்!


இனிக்கும் செந்தமிழ்த் தேன் மொழியாள்
இலங்கிடும் பொன் வதன எழிலாள்

மின்னிடும் பல்வரிசை ஒளியின் கிரீடம்
கன்னியின் கழுத்தோ சங்கினை ஒத்திடும்

மல்லிகைச் சரமாய் மலர்ந்த தேவதை
மெல்லிடை நாணிட வளைந்திடும் பூங்கோதை

கண்களில் காதலை தெளிக்கிறாள் தூவி
காந்தமாய் இழுத்தே கவர்கிறாள் தோழி

கார்குழல் அழகோ கவிதை வரிகளாய்
கன்னங்கள் மலர்ந்தன கமலங்களாய் மாறி

அணிந்த மாலையோ அழகில் சொக்குதே
காதினில் சிமிக்கியோ கிண்கிணி ஆகுதே

வாடி சுந்தரி வனப்பின் காதலி
நாடியே வருகிறேன் நாதமாய்த் தேடி


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post