பேதமை கற்பிக்கும்
போதனைக் கூடமே...!
ஒரே மொழிக்குள்
ஒற்றுமை வேண்டாமா?
இனங்கள் இரண்டு
இரத்தம் ஒன்றல்லவா?
தலைமையின் தலைக்கு
தகுமா இந்த இனவெறி?
தகாத குணங்களை
தகர்த் தெறிந்து விடுநீ....!
இனமும் மதமும்
இரண்டாக இருக்கலாம்.
மனிதன் என்பதில்
மாற்றம் ஏதும் உண்டோ...?
பெண் எனும் தாய்க்கு
பேதமைக் குணம் ஏனோ...?
வளரும் பயிர்க ளறிவில்
வஞ்சகம் கலக்க லாமோ...?
அதிபர் எனும் பதவிக்கு
அறிவில் குறை ஏனோ...?
ஆடைக் கலாச்சாரம்
அவரவர் சுதந்திரம் தானே..!
அடுத்தவர் கைவைப்பது
அடக்கு முறை தானே...?
சிறுபான்மை எமக்குள்
சிறுமைத் தனங்கள் ஏனோ.?
வீண் வம்புகள் செய்து
விஷம் விதைப்ப தேனோ...?
சூழ்ச்சிகள் செய்யும்
சூனிய எண்ணம் ஏனோ...?
சகோதர சமூகங்களுக்குள்
சதி செய்வது முறையா...?
அழுக்குகளை இறக்கி வைத்து
அழகாய் வாழ்ந்திடுவோமே...!
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments