Ticker

6/recent/ticker-posts

Ad Code



வாழ்த்துக்களால் வாழவைப்போம்!


வாழ்த்துக்கள் பலமுறை 
வாழட்டும் தலைமுறை..
வாழ்க்கையே ஒரு முறை 
வாழ்ந்திடுவோம் சிறப்பு முறை..
உலகில் எமக்கு 
வாழ்க்கையே நிறைகுறை..
மண்ணில் நாளும்  
வாழ்ந்திடுவோம் சமநிலை..
வாழ்த்துக்கள் ஒருவரை 
வாழவும் செய்யும்..
வாழ்த்துக்கள் அவரை 
ஆளவும் செய்யும்..
வாழ்த்துக்கள் வெறும் 
வார்த்தை தானே..
வார்த்தையில் இருப்பதோ 
வாழ்க்கையும் தானே..

வாழ்த்துக்கள் சொல்ல 
கஞ்சம் தவிர்த்து
வார்த்தையில் சொல்வோம் 
நெஞ்சம் மகிழ்ந்து..
மகிழ்வாய் பிறருக்கு 
தந்திடுவோம்- வாழ்த்துக்கள் 
நாளும் அழகாய் 
பிறரிடம் பெற்றிடுவோம்..
யாரோ ஒருவர் யாருக்காகவோ 
சொல்லும் வாழ்த்துக்களில்
மனதில் ஏதோ ஒரு மாற்றம் 
இருப்பது சரிதானே..
திறமைகள் புதைந்து இருந்தும் 
வழிகாட்ட ஆளின்றி 
வாழ்க்கையை தொலைத்தவர்கள் 
எத்தனை பேரோ..

வாழ்த்துக்கள் அவர்களின் 
திறமைகளை தொடரட்டுமே..
திறமைகள் தொடர 
காரணமாக அமையட்டுமே..
திறமைக்கு தானே வாழ்த்துக்கள் 
சொல்ல போகின்றோம்
திறமைகளால் வாழ்த்துக்களால் 
வாழ்வை வெல்லட்டுமே..
நாளும் வையகம் 
போற்றட்டும் இரவு பகல்..
வாழ்த்துக்கள் பொங்கட்டும் 
திறமையின் புகழ்..



Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments