Ticker

6/recent/ticker-posts

Ad Code



பிடித்த உனக்கு பிரியமுடன்!


எத்தனை கவிதைகள்
உன்னால் உயிர் பெற்றது
அத்தனையும் வாழ்கிறது
உன்னால் உயிரோடு....!!

ஏதுமற்ற பொழுதுகளில்
ஏதோ எழுதினாலும்
அதோடு உன் 
ஞாபகங்கள்
துளிர் விடுகிறது
நெஞ்சோரம் 
குளிர் மழை 
பொழிகிறது....!!

இக் "கால" 
இலக்கியத்தில்
நான் படித்த
கவிதை 
இலக்கியம் நீ.....!!

உனையே தினம் 
நினைத்து மறக்க
உயிரிலே ஏதோ
மாற்றம்
நடந்து முடிக்க.....
மலர்களில் 
மணம் நிறைந்து கிடக்க
கனவிலே மனங்கள் கலங்கி நடக்க
உலகெல்லாம்
அன்பே சிறந்து நிற்க.....!!

கவிதைகள் எழுதும்
அதிக நேரங்களில் கூட
சற்றே அருகிருந்து
எழுதத் தூண்டும்
உன் நினைவுகள் 
என் பலம்...!!

உன் ஞாபகப்
பெருவெளியில்
நடைபழக
கற்றுக்கொண்ட
நாளிலிருந்து
எனக்கில்லை 
சோகம்
வழி யெங்கும்
பாரங்கள் நிறையும்
விழிகள் நீர் சுரக்கும்
திடீர் சில மாற்றம்
உன்னால் நிகழும்....!!

உன் வீடு தேடிய
கவிதை ஒன்றில்
இப்படிக்கு 
கீழிருக்கும்
என்னை பிடித்த உனக்கு
பிடித்த கவிதை 
ஒன்றில்
சந்திக்கவே
முடிகிறது என்னால்
இப்போதைக்கு....!!


Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments