Ticker

6/recent/ticker-posts

Ad Code



புது அவதாரம்!


கட்டிய
வீடுகளில்
உழைப்பு ஒருபக்கம்
செலவினம் மறுபக்கம்
வட்டம் கட்டமானது
கடவுளர்கள் ஒன்று மூன்றானது...
தடவைக்கு நூறு முறை
உடையில் மாற்றம்
முகபாவனையில் மாற்றம்
பெயரிலும் மாற்றம்

இருப்பினும்
புது அவதாரம்
தேடி பூக்களால் 
அலங்காரப் படுத்தப்படுகிறது
நெற்றி நிறைய
திருநீரும்
நெஞ்சம் முழுதும்
பக்தியும் கொண்ட
குங்குமக் கோலத்தில்
இருக்கா இல்லையா
எனும் மனிதனின்
கேள்விக்கு
"தெரியலயேப்பா"
என புன்னகைக்கும்
கண்ணாடி கட்டங்களில் 
அடைபட்ட புது 
அவதாரக் கடவுள்கள்....


 

Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments