விவசாயி!

விவசாயி!


உலகில் கதிரவன் உதிக்கும் முன்னே
உழைக்க கண்விழி விழித்திடுமே..
மக்கிப்போன மண்ணிலும் விளைச்சல் தரும் விசித்திரன்..
காலத்தை கணக்கிட்டு பயிரிடும் புத்திரன்...

மண்ணுலகில் மண்ணையே நம்பும்  மானிடன்..
வானுலகில் மழையை வேண்டும் யாசகன்..
பிறரருக்காக மண்ணில் வாழும் போராளி..
உணவு பஞ்சம் போக்கும் கொடையாளி..
பிறர் பசிதீர பாடுபடும் பாட்டாளி....
இயற்கையோடு இயல்பாய் வாழும் கூட்டாளி..

வேலைக்காக வைத்த பெயர் விவசாயம்..
வேலைக்காரன் புனைப்பெயர் விவசாயி..
நாளும் உடலாலே உழைப்பு ஓயாமல்...
வாழ்வில் உழைப்புக்கேற்ற ஊதியம் போதாமல்....

விவசாயி உயிர் விவசாயம் என்றால்- இன்று
விவசாயம் நாட்டில் வெளுத்த சாயம் தானே ..
அன்று விவசாயி விளைச்சல்  தண்ணீரில்..
இன்று விவசாயி விளைச்சலோ கண்ணீரில்...



Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post