குழந்தையை விட புடவை முக்கியமா?-ஒரு தாயின் மோசமான செயல்

குழந்தையை விட புடவை முக்கியமா?-ஒரு தாயின் மோசமான செயல்

தில்லி பரிதாபாத்தில் உள்ள செக்டார் 82ல் உள்ள குடியிருப்பு பகுதியில், நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரிதாபாத்தில் உள்ள குடியிருப்பில், 10 வது தளத்தில் இருந்து பால்கனியில் ஒரு குழந்தை தொங்குவதைக் காணும் திகிலூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தை, அந்த குடியிருப்பின் எதிரில் வசிக்கும் ஒருவர் கேமராவில் படம் பிடித்துள்ளார். ஒன்பதாவது மாடியில் உள்ள பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த தனது சேலையை எடுக்க தாய் தனது மகனை பெட்ஷீட்டால் கட்டி இறக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎஸ் அதிகாரி திபன்ஷு கப்ரா ட்விட்டரில் பதிவு செய்த வீடியோவை பார்த்தால் மனம் பதரும். அந்த குழந்தை பெட்ஷீட்டின் உதவியுடன் ஏறுவதையும், அவரது தாயும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் குழந்தையை மேலே இழுப்பதையும் காணலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவி, நெட்டிசன்கள் கொந்தளித்து கருத்து தெரிவித்துள்ளனர். தனது குழந்தையை விட புடவை தானா முக்கியம் என கடுமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
குறிப்பிட்ட அந்தப் பெண்மணி, புடவை எடுப்பதற்கு யாருடைய உதவியையும் அல்லது ஆலோசனையையும் நாடவில்லை. ஒருதலைப்பட்சமாக தனது மகனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அபாயகரமான வகையில் முடிவு எடுத்து, மகனின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார்.    

"அவ்வளவு ஆபத்தான ஒன்றைச் செய்வதற்குப் பதிலாக அவள் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களையோ, அல்லது குயிருப்பின் பராமரிப்பு அலுவகத்தையோ தொடர்புகொண்டிருக்க வேண்டும்" என்று பக்கத்து வீட்டுக்காரர்களும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணுக்கு குடியுயிருப்பின் பராமரிப்பு அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post