ஏழ்மைக்கு உலகில் வறுமையே சொந்தம்
ஏழைக்கு மனதில் பொறுமையே பந்தம்
ஏழைக்கு உலகில் அடையாளம் இல்லை
அடையாளம் பெறுவதில் அனுமதி தொல்லை
அயராத உழைப்பில் அன்றாட வாழ்க்கை
அழகாக ஏற்றிடும் பொதுவான வாழ்க்கை
உரிமைகள் கொள்ளாத உறவுகள் ஆயிரம்
உறவுகள் என்றாலே வார்த்தைகள் உதிர்ந்திடும்
உதவிடும் மனதில் உறவுகள் இல்லை
உதவிகள் செய்தால் சொல்லிடும் தன்மை
அழுகை என்பதோ ஆறுதல் இங்கே
தனிமை என்பதோ தனித்துவம் இங்கே
நித்தம் துன்பங்கள் அதிகம் ஏற்பதாலே
துணிந்திடும் வலிமை மனதினில் உண்டோ?
திறமைகள் ஆயிரம் புதைந்தே இருக்கும்
வெளியில் தருவதில் உலகமே தயக்கம்
தாழ்மை குணமே அதிகமாய் இருக்கும்
தகர்த்தால் வாழ்வில் உலகமே வியக்கும்
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments