Ticker

6/recent/ticker-posts

Ad Code



மீறவேண்டாம்!


நிழலுக்கு நிழலிங்கே துரோகம்செய்ய லாமா?
விழுதுக்கு விழுதிங்கே பகைவளர்க்க லாமா?

நீரோடு நீரிணைய மனம்வெறுக்க லாமா?
தேரசைய அச்சாணி  மனந்தளர லாமா?

மழைநீரை ஏற்க நதிமறுக்க லாமா
மலையோடு   அருவிவர முரண்பட லாமா?

சோலைமலர் செங்கதிரைத் துரத்திவிட லாமா?
மாலைமலர் வெண்மதியை ஒதுக்கிவிட லாமா?

நதிகலக்க கடலிங்கே தாழ்போட லாமா?
விதிகளுக்கு மாறுபட்டால் இயக்கமில்லை சொல்லு!

இதுபோல்தான் எல்லாமே மறந்துவிட வேண்டாம்!
விதிமீறிப் போய்விட்டால் நிம்மதிதான்  போகும்!

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments