கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-7

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-7


எண்ணெய்க்கொப்பரை
மகன்கள் அருகிலில்லை! மன்னன் உடலைப்
பதப்படுத்தச் சொன்னான் முனி.
உடல்தன்னைத் தைலக் கடாரத்தில் வைத்தே
கெடாமல் இருக்கவைத்தார் காத்து.

மக்களின் இரட்டைத்  துயரம்
மன்னனும் இல்லை! இராமனும் இல்லையே!
இவ்விரண்டு துன்பங்கள் ஏன்?
நினைக்கின்றோம் சாவதற்கு! ஆனாலும்  நேரம்
கனியவில்லை! வாழ்கின்றோம் காண்.

மூவரும்மருதநிலக்காட்சிகள்கண்டுசெல்தல்
அன்னங்கள் கூடும் மருதநிலக் காட்சியைக்
கண்டு களித்திருந்தார் காண்.
தாமரைப்பூ வென்றே வண்டுகள் ராமனின்
காலடியைச் சுற்றின அங்கு.
கோமகள்  வண்டின் மயக்கத்தைக் கண்டேதான்
நாணி நகர்ந்தாள் சிரித்து.

இயற்கை எழிலை மனங்குளிரப் பார்த்து
வலம்சென்றார் கானகத்தில் தான்.
கங்கைக்கு வந்தார்! முனிவர்கள் எல்லோரும்
அண்ணலைக் காணவந்தார் அங்கு.

கங்கையின்கருத்து!
பாவங்கள் நீங்கிட மக்கள் குளிப்பதால்
பாவத்தை நான்சுமந்தேன் இங்கு.
என்னிடத்தில் கார்முகமே !நீராடி நின்றதாலே
என்பாவம் நீங்கியது பார்.

கங்கைசெவிலித்தாய்போல்நீராட்டுதல்
சீதை குளிப்பதற்கு கங்கையே தாயாகி
கோதிவிட்டு நீராட்டி னாள்.

வந்தான்குகன்
தேனுடன் மீனும் உணவாக கொண்டுவந்தான்!
ஈனமற்ற ராமன்சொல் கேள்.
பக்தியுடன் கொண்டுவந்த எவ்வுணவும் நற்சுவையே!
உட்கொள்ள தூய்மைதான் பார்.
அன்புடன் கொண்டுவந்தாய்! உண்டுவிட்ட காரணத்தால்
உண்டதுபோல் ஏற்கின்றோம்!  இங்கு.

தருப்பைப்புல்லில்துயில்தல்
தருப்பைப்புல்  மஞ்சமாக ராமனுடன் சீதை
கரம்பிடித்துத்  தூங்கினார் காண்.
இலக்குவன் துஞ்சாமல் வில்லேந்தி காத்தான்!
உளத்தின் கடமை உணர்வு.

கங்கையைக்கடந்துசெல்லுதல்
கங்கையின் நீரெடுத்து ராமனும் சீதையும்
அங்குமிங்கும் வீசியாடி னார்.
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post