Ticker

6/recent/ticker-posts

காலமெல்லாம் காத்திருப்பேன்!



எங்கிருந்தோ வந்தாய்... 
என் இதயத்தில் நுழைந்தாய் நீ... 
அன்பைத் தந்தாய் நீ - அதில் 
அழகிய காதலையும் கலந்தாய் நீ.... 
நித்தம் மகிழ்ந்தேன் 
உனை நினைத்து..... 
என் இதய வாசல் 
திறந்தது உனக்காக!

நுழைந்தவள் நீ...! 
திருடிவிட்டாயடி பெண்ணே ! 
என் இதயத்தை ! 
தேடிணேன் என் இதயத்தை 
பறந்து விட்டாயடி திருடி 
தவிக்கின்றேன் தேடி!

பறந்தவள் வருவாயென்று..... 
தவிக்கின்றேன் கரையோரத்தில்...! 
காத்திருப்பேன்...... 
காலமெல்லாம் கண்ணே! 
வந்துவிடு..அழகிய பெண்ணே 
தந்துவிடு என் இதயத்தை !







Post a Comment

0 Comments