161. : வினா: குடிஅழிந்து குற்றத்திற்கு ஆளாவது எப்போது?
விடை: நேர்மையின்றி பிறர் பொருளைக் கவரும் போது.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.
(171)
162. வினா : விரும்பத்தகாத வளர்ச்சி எது?
விடை: பிறர் பொருளைக் கவர்ந்து பெறும் வளர்ச்சி
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.
(177)
163. வினா : நம் செல்வம் குறையாதிருக்க வழி யாது?
விடை : பிறர் பொருளை கவர நினைக்காமல் இருப்பதே.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். (178)
164. வினா : குறையும், கடுஞ்சொல்லும் எப்போது கூறலாம்?
விடை: நேருக்கு நேர் நின்று பேசும்போது.
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல்.(184)
165. வினா : மன ஒழுக்கமற்றவர் என்பதை எப்படி அறியலாம்?
விடை: பிறர் பற்றிக் குறை கூறி வாழ்வதில் இருந்து
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.(185)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments