குறள் 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
இந்தப்பாட்டி
லண்டனுக்குப் போனாங்க!
திரைல பாத்துப்பாத்து
வெறுத்துப் போச்சு!
நினைவில் வந்து பாத்து
அன்புகாட்டல!
கனவுல அடிக்கடிவரதுனால
என்உயிர்நெலச்சிருக்கு!
குறள் 1214
கனவினான் உண்டாகும் காமம்
நனவினான் நல்காரை நாடித் தரற்கு.
அம்மா!
அப்பா அலுவல்காரணமா
ஊருக்குப்போயி
ஆறு நாளாச்சு.
மனசு ஏங்குதும்மா!
நேரில் வந்து அன்பா
நாலுவார்த்த பேசமுடியாதுல!
நான் தூங்குறப்ப
அவர தேடிப்போயி
கொண்டு வந்துகனவு
காட்றதுனால அந்தப்
பாசம்கலந்த
அன்பு இன்பமா
இருக்குதும்மா!
குறள்1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே
கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.
அம்மா என்னுடைய அத்தை
போனவாரம் கடைக்கு
கூட்டிப்போனாங்க!
கேட்டதெல்லாம்
வாங்கித்தந்தாங்க!
நேராபாத்தப்போ இன்பமா
மகிழ்ச்சியா இருந்துச்சு!
ஊருக்குப் போயி ரெண்டு
நாளாச்சு!
நேத்து கனவுல வந்தாங்க
அதுவும் இன்பமா இருந்துச்சு!
அத்தைன்னா அத்தைதான்!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments