என்ன அம்மா இன்னும் அக்காவை காணல்லியே... "
எனும் குரல் கேட்டு திரும்பி பார்த்த கவிதா
" அவ வர்ர நேரம் தான் இது .. வந்துடுவா" என சின்ன மகளின் கேள்விக்கு பதிளலித்தாள்.
" ஆமா தெருவுக்கு போன அப்பாவையும் இன்னும் காணல்ல ... நேரம் காலம் தெரியாம இவரும் எங்க போராறோ " என்று அங்காலாய்த்தவளாய் முன் வாசல் கதவோரமாய் தெருவைபார்த்த வண்ணம் கவிதா நின்றிருந்தாள்.
ஆனாலும் அவளின் மனம்" பக் பக்" எனவேகமாக அடித்துக்கொண்டது.
அதற்கு காரணம் தன் மூத்த மகள் மேகலாவுக்கு இன்றும் வரண் பார்க்க வருவது தான்." இதோட பத்தாவது வரண் வரப்போவது ... இந்த வரணாவது சரியாக அமையனும் ....கடவுளே.. " என மனதுக்குள் எண்ணியவளாய் பெருமூச்சு விட்டாள்.
மேகலா...கறுப்பழகி,உயர்தரம் வரை படித்து முடித்து விட்டு... தன் ஊரிலேயே இருக்கும் கார்மென்ட் ஒன்றுக்கு வேலைக்கு போகிறாள். அவளை பல வரண்கள் வேண்டாம் என்று சொல்ல அவளின் ஏழ்மை மட்டுமில்லை நிறமும் ஒரு காரணமாயிருந்தது.
படைத்தவனாக கொடுத்தவற்றைக்கூட ஒதுக்கும் சமூகத்தை நினைத்து பல முறை பரிதாபப் பட்டிருக்கின்றாள் மேகலா.
அவளுடைய நிறத்தைப் பார்த்து கேலி பேசுகின்றவர்களைப் நினைத்து பரிதாபப் பட்டிருக்கின்றாளேயன்றி ,தான் கறுப்பென்று ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை .இறைவனாகக் கொடுத்ததை மனமுவந்து ஏற்றுக்கொண்டு வருகின்ற தடைகளை தாண்டிச் செல்லும் மனப் பக்குவத்துடன் இருந்தாள் மேகலா.
தாயின் சிந்தனையை கலைப்பது போல " அம்மா .... அக்கா வந்துட்டாங்க..."" என்று சின்ன மகளின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தாள்.
" என்னம்மா ...இன்னக்கி ஆப் டே போட்டு வா என்று தானே சொல்லி அனுப்பினேன்...அவங்க வரப்போகும் டைம்ல வந்திருக்க ..." என்றவளை
." அம்மா டைம்முக்கு வந்து என்ன பண்ண போறேன் ... வர்ர மாப்பிள்ள என்ன என்ன பார்த்ததும் பிடிச்சிருக்கு என்றா சொல்ல போறாரு?...வழமையா நடக்குறது தானே. போய் பதில் சொல்றேன் சொல்வாங்க ...அவ்வளவு தான்..பதிலே வராது..இல்ல ..பொடோவுல இருந்தத விட நேர்ல இன்னும் கறுப்பா இருக்கா ...பிடிக்கலன்னு சொல்வாங்க ...இது தான் நடக்க போகுது.....இதுக்கு வேலய பாதில விட்டுட்டு வரனுமா...நமக்க மூனுவேல கஞ்சு ஊத்துற அந்த வேலய சரியா செய்வோம்..." என்றாள்
மிகவும் சலித்தவளாய் சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
மாப்பிள்ளை வீட்டாரும் வந்தனர்.
மேகலா .. புதுமணப்பெண்ணாக அலங்கரித்துக் கொண்டு காபி டம்ளரை அனைவருக்கும் பரிமாறினாள்.
அனைவரும் காபி பலகாரம் சாப்பிட்டு விட்டு தகவல் சொல்லி அனுப்புவதாக கூறிவிட்டு சென்று விட்டனர்.
ஆனாலும் மேகலாவின் மனதில் இவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்ற எண்ணம் தோன்றியது.
நாட்கள் உருண்டோடின எந்த பதிலும் வரவில்லை.மேகலாவின் வாடகை வீடும் முடிந்து விட்டது.அதே சமயம் காமன்டிலும் அவளுக்கு உயர் பதவியும் நகர்புற காமன்டுக்கு மாறுதலும் கிடைத்தது. அதனால் அங்கேயே வீடும் பார்த்து அமைத்துக் கொண்டனர் .
மாதங்கள் பல உருண்டோடின. எந்த வரணும் மேகலாவுக்கு அமையவில்லை. கவிதாவை மிகவும் சஞ்சலப்படுத்தியது.
எதிர் பாராத ஒரு நாள் ஒரு விபத்தில் அம்மாவும், அப்பாவும் சிக்குண்டனர்.அப்பா அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.பலத்த காயங்களுடன் அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை .பலனின்றி அம்மாவின் உயிரும் பிறிந்து விட்டது.
என்ன செய்வது என்று அறியாமல் ஒரு நிமிடம் உறைந்து போய்விட்டாள். திக்கு தெரியாத காட்டில் தனியாக நிற்பது போல் உணர்ந்தாள்.பூமியே நின்று விட்டது போல் இருந்து.
தங்கையை அனைத்தவளாய் ஓ வென அழ ஆரம்பித்து விட்டாள்.
" அழாதீங்க மேகலா ..பிளீஸ்.." என ஆணின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.
அன்று பெண் பார்க்க வந்து எந்த முடிவும் கூறாமல் போன அதே முகம்.
"" அழாதீங்க மேகலா...என்ன பண்ணுறது எல்லாம் கடவுளின் விதி.. எம்மால் என்ன செய்ய முடியும்...மேற்படி என்ன நடக்கோனுமோ அத பார்ப்போம்..உங்க கூட நானும் இருக்கேன்...""என்றார்.
இருவரின் இறுதி சடங்கும் நல்லபடியாக முடிந்தது.அவரின் ஒத்துழைப்போடு.ஆனாலும் மேகலாவின் உள்ளம் துடித்தது.ஏன் அன்று எந்த முடிவும் சொல்லாம போனீங்க...என்று கேட்கவேண்டும் போல் தோன்றியது ஆனாலும் மௌனித்தாள்.
தேடிவந்து உதவி செய்தவரை அவமரியாதை செய்ய கூடாது.என்ன பிடிக்காததுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கலாம்.அத வீணா நாம கேட்டு ஏன் அவரை சங்கடபடுத்த வேணும் என எண்ணினாள்."" எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது மேகலா.."என்று கூறிய அவரை பார்த்த மேகலா...இந்த டைம்ல ...எல்லா சொந்தமும் கைவிட்ட நேரத்துலேயும்..உங்க உதவி எனக்கு பெரிய உதவியாக இருந்தது.இத ஒரு போதும் நான் மறக்க மாட்டேன்...நிச்சயம் எப்போதாவது இதுக்கு கைமாறாக ஏதாவது செய்வேன்..என்று கூறி விம்மி விம்மி அழுதாள்.
கதறி அழுதவளின் கைகளை பிடித்தவராய்....
எனக்கு ஏதாவது கைமாறு செய்வதாக இருந்தா...அநாதயாக இருக்கிற என்ன கல்யாணம் பண்ணுவீங்களா...என கேட்டார்.
அதிர்ச்சியில்...மேகலா "என்ன ...அநாதையா...என்ன சொல்றீங்...."
"ஆமா.. அன்னக்கி உங்கள பொண்ணு பார்த்துட்டு வர்றப்போ...எங்க வேன் விபத்துககுள்ளாச்சி...என் அம்மா , அப்பா இருவரும் அதே இடத்துல இறந்துட்டாங்க.நான் போன மாசம் சுகமாகி வந்தேன்.உங்களுக்கு தகவல் கொடுக்க எந்த வழியும் ....இருக்கல்ல...ஸாரி...மேகலா...நீங்க அந்த டைம் என்ன நெனச்சீங்க என்டு என்னால சொல்ல முடியும்...ஆனாலும் விதி எங்கள இப்படி சேர்க்கும் என்டு நினைக்கல..". .
"ஐயோ!...நான் உங்கள தப்பா நெனச்சிட்டேனே...."
"இல்ல மேகலா நான் தான் உண்மைய சொல்லாம மறச்சிட்டேன்...ஸாரி மேகலா...நான் யாருனு தெரியல்லயா உங்களுக்கு...என்ன நினைவில்லயா....உங்கள தெரியாம நான் பொண்ணு பார்க்க வரல்ல...சின்ன வயசுல நானும் நீங்களும் ஒன்னா படிச்சோம் ஆனா நான் இடையில வேற ஸ்கூல் போய்ட்டேன்...ஞாபகம் வருதா.."
.
நீங்க....ரமேஷ் "
'...ஆ...யெஸ்... இப்ப சம்மதமா...மேகலா...என்ன சொல்றீங்க...'
எந்த பதிலும் கூறாதவளாய்...மௌனம் சம்மதம் என்பது போல தலைகுனிந்தாள் மேகலா.....
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments