பெண்கள் கருத்தரிப்பு மற்றும் கர்ப்பகாலத்தில் சத்தில்லாத உணவை சாப்பிட்டுவந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின் எதிர்காலத்தையே பாதித்துவிடுவதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆடம் வாட்கின்ஸ் என்ற அமெரிக்க மருத்துவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
பொதுவாக, ஒரு பெண்ணின் மாதவிலக்குச் சுற்றின் 14வது நாளில் கருமுட்டையானது அவளது சினைப்பையில் உருவாகி கருக்குழாய் வழியாக பயணம் செய்து கர்ப்பப்பையை வந்தடைகிறது. இந்த கரு முட்டை 48 மணிநேரங்களுக்கு உயிருடன் இருக்கும்.
அப்போது ஆணுடன் உறவு கொள்ளும்போது கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படும் விந்தில் உள்ள உயிரணு இந்த முட்டையுடன் இணைந்து கரு உருவாகிறது. இதைத்தான் கருத்தரிப்பு என்கிறோம்.
இந்த அற்புதமான நிகழ்வின்போது, கருத்தரிப்பு ஆகும் பெண் தகுந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடாவிட்டாலோ அல்லது கருத்தரிப்புக்குப் பிறகு சத்துப் பற்றாக்குறை உணவை சாப்பிட்டாலோ பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் பலவித நோய்களுக்கு ஆளாக நேரிடுமாம்.
எலிகள் மீது ஆடம் வாட்கின்ஸ் நடத்திய சோதனையில் இதை உறுதி செய்ததாக அவர் தெரிவித்தார். சோதனையில், ஒரு பெண் எலிக்கு புரதச் சத்துக் குறைவான உணவைக் கொடுத்துள்ளார். பிறகு அந்த எலியை கருத்தரிக்கச் செய்தபோது பிறந்த குஞ்சுகள் வளர்ந்ததும் பல்வேறு குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
oneindia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments