Ticker

6/recent/ticker-posts

எழுதித் தீரா இன்பம் நீ!


எழுதித் தீரா
இன்பம் நீ
முயன்று தோற்று
மகிழும் மொழி நான்

நீ விளக்கேற்றுகிறாய்
எனக்குள் பிரகாசம்
என்னைப் போர்த்திய
இருளெல்லாம் இருளில்

சிந்தாமல் சிதறாமல்
உன்னன்பை ஏந்துகிறேன்
நிறைகுடமாய் என்னுள்
உன் காதல்

கவிதைக் கண்களுனக்கு 
காவிய நேசமெனக்கு 
நரகம் செல்வோமா 
காதலால் சொர்க்கமாக்க

சொல்லிலும் செயலிலும்
புன்னகைக்கும் அன்பு
நரகத்தை புதைக்கிறது
சொர்க்கத்தை விதைக்கிறது
 
Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

1 Comments

  1. இலங்கையிலிருந்து வெளிவரும் வேட்டை தமிழ் வார இதழில் எனது தன்முனைக் கவிதைகள் ...
    அற்புதமான படத்துடன் அருமையாக வெளியிட்ட இதழின் ஆசிரியர் அவர்களுக்கு என் பெரு நன்றிகள்...

    ReplyDelete