கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-12

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-12


அசோகவனத்தில்சீதை
அசோக வனத்தில் மரத்தடியில் காவலுடன்
சீதை சிறைப்பட்டாள் பார்.

பம்பைக்காட்சி
பம்பை வழியாக சீதையைத் தேடியே
அண்ணல் நடந்தார் தொடர்ந்து.
தங்களைக் கண்டால் கயல்விழி சீதையை
எண்ணிக் கலங்குவானோ சொல்?
இப்படி எண்ணிய மீன்களோ நீருக்குள்
முற்றிலும் மூழ்கின பார்.
புலமைத்  தெளிவற்றோர் ஆரவாரம் போல
கலகலப்பில் புள்ளினங்கள் பார்.
பெண்யானை வாய்க்குள்ளே தண்ணீரை ஆண்யானை
அன்புடனே ஊட்டியதைப் பார்த்து
தன்மனைவி சீதைக்கோ ஊட்ட முடியவில்லை
என்றேங்கி நின்றான் தவித்து.

இராமன்நீராடியதால்பொய்கைஅடைந்த  மாற்றம்
அண்ணலை வாட்டிய  காம நெருப்பாலே
தண்ணீர் அனலான தாம்.
துண்டிரும்பைக் கொல்லனோ தண்ணீரில் தோய்த்ததும்
அந்நீரும் சூடேறும் வெந்து..
அப்படித்தான் அண்ணல் முழுகியதும் பொய்கையும்
முற்றிலும் மாறியதாம் அங்கு

கிட்கிந்தா காண்டம்
கிட்கிந்தை காட்டில் அனுமன் இருவரை
உற்றுத்தான் பார்த்தான் வியந்து.

சந்தேகம் தீர்ந்தேதான் ராமன் எனத்தெளிந்தான்!
அண்ணலைக் கண்டான் பணிந்து..

அழைத்துவந்தான்! சுக்ரீவன் வந்துசேர்ந்தான்! உள்ள
உளைச்சலைக் கூறினான் நொந்து.

இராமன் சுக்ரீவனுக்கு உறுதிமொழி
உன்னைப் பகைத்தவர் என்னைப் பகைத்தவர்
நண்பரும் அவ்வண்ண மே!

ஆருயிர் நண்பனும் நீதான் என்றுரைத்தான் !
காகுத்தன் சொன்னான் மகிழ்ந்து.

என்னிலையும் உன்னிலையும் இன்றிங்கே ஒன்றுதான்!
தன்னந் தனியராய் நாம்.

மராமரத்தின்மகிமை
மராமரக் கொம்புகள் வெண்ணிலவைத் தீண்டியதால்
நிலாவிலே கருப்பாய்த் தழும்பு.

ராமனின்அம்புமராமரத்தைத்துளைத்தல்
ராமனின் அம்பொன்றோ ஏழு மராமரத்தை
ஆனமட்டும் தாக்கியது சென்று.

ஏழின் தொகுப்பிலே தாக்கிட வேறில்லை!
ஊழிபோல் மீண்டது பார்.

நேராக ராமனின் அம்பறாத் தூணியில்
வேர்பதித்து நின்றது வந்து.

வாலியைக்கொல்லஆலோசித்தல்
மறைவிடத்தில் நானும் தருணத்தைப் பார்த்து
மறைந்திருப்பேன்!  ராமன்தான் சொன்னான்.

ஆட்சிவெறி கொண்டிருந்த சுக்ரீவன் போற்றினான்!
ஆற்றல் நகர்ந்தது சோர்ந்து.
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post