
பறக்க நினைக்கும்
பொழுதெல்லாம் ஏதோ ஒரு
காரணத்தினால் இறகின்
வண்ணத்தை தூரிகையில்
பதம் பார்த்து விடுகிறாய்
உன் பார்வைகளால்
பார்வையாளர்களை
எப்படி நான் கவர்வது
நான் தினம் பறக்கும்
நிலவின் நிழலில் மட்டும்
என்னை மிஞ்சிய
பல பட்டாம்பூச்சிகள்
நீ மேனி உரசிய காரணத்தினால்
கலைந்துவிட்டது
காத்திருப்பு வண்ணங்கள்
ஒரு புள்ளியில்
யாரெல்லாம் அழகை
அடைகாத்து சிலாகித்தார்களோ
அவர்களுக்கு மட்டும்
கன்னத்தை வண்ணமாக்கி
செல்கிறது இந்த
அழகு பட்டாம்பூச்சி
நானும் வண்ணமாக விடுகிறேன்
குழந்தையின் கையில்
சிக்கிய வானவில்
வளையங்களை போல
நீளமும் சதுரமும் வட்டமாய்
மாறிப் போன உணர்விததும்பிகளாய்
வண்ணங்கள் மட்டும்
எனது எண்ணத்தூரிகையில்
மேலும் கீழுமாக
இருக்கட்டும்
இறுக்கம் திறந்த இறகுகளைக்
கொண்ட அந்த ஒரு
பட்டாம்பூச்சிவானவில்லாய்
எனது எட்டாவது வண்ணத்தில்
Vettai Email-vettai007@yahoo.com


0 Comments