மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-49 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-49 (வரலாறு-பாகம்-2)


தெல்தொட்டை -49
பள்ளேகம குடியிருப்பிலிருந்து ஆரம்பமாகிய தெல்தொட்டை இஸ்லாமியக் குடியிருப்புக்கள் வரிசையில் புதிதாக உருவாகிய  குடியிருப்புப் பகுதியாக  தெல்தொட்டைப் பட்டினமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும்  அடங்குகின்றன.  1930ம் ஆண்டுகளைத் தொடர்ந்துள்ள தசாப்தங்களில்  தெல்தொட்டை பட்டினத்தை நோக்கிய முஸ்லிம் குடிப்பெயர்ச்சிகள் ஆரம்பமாகியதாகக் கூறப்படுகின்றது. தமிழ், சிங்களக் குடிகளும் இணைந்து வாழும் தெல்தொட்டைப் பட்டினம்  மத்திய பிரதேசத்தில் வளர்ச்சியடைந்துவரும் பதிய பட்டினங்களுள் ஒன்றாகும்.  

பட்டினத்தைச் சுற்றியமைந்த முஸ்லிம் கொலனி, பியசேனபுர, லிட்டில் வெளி  போன்ற பகுதிகளும்;   பாரிய முஸ்லிம் குடியிருப்புப் பிரதேசங்களாக வளர்ச்சியடைந்து வருவதைக் காணலாம்.  பட்டினத்தில் சுமார் 125 குடும்பங்களும், முஸ்லிம் கொலனியில் 360 குடும்பங்களும், பியசேனபுரையில் நாற்பது குடும்பங்களும், லிட்டில் வெளியில் எழுபது குடும்பங்களுமாக சுமார் அறுநூறு குடும்பங்கள் வாழும் பாரிய பிரதேசமாக இன்று தெல்தொட்டைப் பட்டினப் பிரதேசம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. நகரில் அமைந்திருக்கும் ஜாமிஉல் அன்வர் ஜும்ஆ மஸ்ஜித், முஸ்லிம் மத்திய கல்லூரி போன்றவைகளால் பட்டினம் சிறப்புற்று வருவதைக் காணலாம்.

நிர்வாகம்
நூற்றாண்டுகளுக்கு உரிமைகோரும் தெல்தோட்டைக் குடியிருப்பாளர்களது நிருவாகப் பாரம்பரியம் மன்னர்களது காலம் முதல் ஆரம்பமாவதாகப் பேசப்படுவதுண்டு. அவர்கள் பெற்றிருந்த விருதாவளிகளுள் முஹந்திரம், லேகம், நிலமே, விதானை, கோராள, கம்மஹ,முலாதானி,ஆரச்சி,வெல்முலாதானி(வட்டவிதான)போன்றவை  குறிப்பிடத்தக்கவை. ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து  நிர்வாகத்தின் ஏகபோகம் அவர்களது நேரடிச் செல்வாக்குக்கு உட்பட்டபோதும் விதானை, கோராள, முதலி, வாஸலமுதலி, அத்தபத்துமுதலி, முகந்திரம், போன்ற உள்ளுர் நிர்வாகப் பதவிகளை சுதேசிகளுக்கு வழங்கி கௌரவித்தனர்.  முதலி எனப்படுபவர் ஆளுனருக்கு ஆலோசனை கூறும் நிர்வாகியாகப் பதவியை வகித்தவராவார். 

ஒரு பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த மஹமுதலிக்குத் துணையாக வாஸலமுதலி, அத்தபத்து முதலி போன்ற பதவிகள் அமைந்திருந்ததோடு, அவர்கள் அரசாங்கத்தால் நிலபுலன்கள் வழங்கப்பட்டு ஆதரிக்கப்பட்டும் வந்தனர்.  ஆங்கிலேயர் வருகையைத் தொடர்ந்து திஸாபதி பதவி அறிமுகஞ் செய்யப்பட்டிருக்கின்றது. அவரின் நிர்வாக அலுவலகமாக 1865ம் ஆண்டு முதல் அறிமுகஞ்செய்யப்பட்ட கச்சேரிகள் விளங்கின.   திஸாபதிக்கு உதவியாக ரட்டே மஹத்தியா (மணியக்காரர்) பதவியும், ரடேமஹத்தியாவுக்கு உதவியாக கிராமத் தலைமைக்காரர்  பதவியோடு பீஸ் ஒபிஸர்  பதவியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.  நாடு சுதந்தரம் பெறும்வரை நிலவிய உள்ளுர் நிர்வாகத்தில் கணிசமான பதவிகளை தெல்தொட்டை முஸ்லிம்களும் வகித்திருப்பதை அறியலாம்.

அவர்களது மேதாவிலாசத்தை உறுதி செய்வதாக வழங்கப்பட்டிருந்த பதவிகளுள் முஹந்திரம், லேகம், நிலமே, விதானை, கோராள, கம்மஹ, முலாதானி, ஆரச்சி, வெல்விதான (வட்ட விதான) குறிப்பிடத்தக்கவை. மேதாவிலாசத்தை வகித்தவர்களுள் மெடிகே லேகமாகப் பதவி வகித்த மரிக்கார் தம்பி மகலேகம்லா கெதர ஸ{லைஹா உம்மா, பட்டியகம முகந்தரம்லா கெதர அபூபக்கர் ஆரச்சி, கோணாகொட கல்பொத்தேகெதர N~கு அப்துல் காதிர் உமர் முஹிதீன் வெல் முலாதானி குறிப்பிடப்பட வேண்டியவர்கள். அக்காலை பிரதேச நிர்வாக அலகுகளில் சிறிய அலகுகள் வஸம என்ற பெயரில் அழைக்கப்பட்டன. அவற்றை நிர்வகிப்பதற்கு கிராமத் தலைமைக்காரர்  முறை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இப்பதவிகளுக்குரியோரை நியமனஞ்செய்யும் அதிகாரம் ரட்டே மஹத்தியா என அழைக்கப்பட்ட பிரிவு அதிகாரியின் கீழ் இருந்தது.

தெல்தொட்டைப் பிரதேச கிராமத் தலைமைக்காரர்களுள் முன்னோடியாகப்  போற்றப்படுபவர் பள்ளேகம வஸத்தின் ஆரச்சியாக நியமனஞ் செய்யப்பட்டிருந்த மாமுநெய்னாரின் குமாரர் ஸுலைமான் ஆரச்சியாராகும். அவர் வரிசையில் கனவான்களான அபூபக்கர் ஆரச்சி, தாவூத் ஆரச்சி, இப்றாஹீம் ஆரச்சி, அப்துர் ரஹீம் ஆரச்சி, முஹம்மது ஆரச்சி, மீரா ஸாஹிப் ஆரச்சி, முஹம்மது காஸிம் ஆரச்சி (அப்துல் காதர்), அபூஸாலிஹ் ஆரச்சி  போன்றோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். விதானைகளாகப் பதவி வகித்தவர்களுள் யூஸ{ப் விதானை, ஸ{லைமான் விதானை, முஹம்மது ஸாலிஹ் விதானை என்போர் பிரதானமானவர்கள்.  1963ம் ஆண்டு கிராமத் தலைமைக்காரர் பதவி ஒழிக்கப்பட்டு, கிராம சேவையாளர் பதவி அறிமுகமாகியது. அப்பதவிப் பெயர் தற்போது கிராம நிலதாரி எனப்பிரயோகிக்கப்படுகின்றது. சுமார் நாற்பதுக்கும் அதிகமாகன அதிகாரங்களைப் பெற்றிருக்கும் இப்பதவி 1989ம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த  வஸம எல்லைகள் மாற்றப்பட்டதன் விளைவாக முஸ்லிம்களது செல்வாக்குகள் நிர்வாகத்துறையில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியே;றபட்டதெனலாம். கிராம சேவையாளர் நடைமுறை அறிமுகஞ் செய்யப்பட்டதன் பின் தெல்தோட்டைக் குடியிருப்பில் ஜனாப்களான அப்துல் மஜீத் அப்துல் ஹஸன், ஸெய்யிது உவைஸ், மீரா ஸாஹிப் குவைலித், காஸிம் மீரா ஸாஹிப் எனப் பலர் பணிபுரிந்துள்ளனர். தற்போதும் குடியிருப்பைச் சேர்ந்த பலர்  கிராம நிலதாரிப் பதவிகளை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.  நிர்வாக சேவையாளர்களாக விவாகப் பதிவாளர் பதவிகளையும், குவாஸி நீதவான்கள் பதவிகளையும் குறிப்பிட முடியும். முஸ்லிம் திருமணப் பதிவுச் சட்டம் 1937ம் ஆண்டு முதல்அறிமுகமாகியதைத் 
தொடர்ந்து முஹம்மது அலி ரெஜிஸ்ரார், எம். ஏ. அப்துல் றஹீம் ரெஜிஸ்ரார், எம். ஏ. அப்துல் கபூர் ரெஜிஸ்ரார் போன்றோர் ஆரம்ப முதல் விவாகப்பதிவாளர் பதவிகளை அலங்கரித்துள்ளனர்.

குவாஸி நீதவன்களாக  கண்டியைச்சேர்ந்த வழக்கறிஞர் ஏ. ஏ. லதீப், மௌலவி ஏ. ஸீ. எம். அஜ்மல் கான், மௌலவி எச். அப்துல் கபூர், மர்ஹ_ம் மௌலவி ஏ. ஸீ. எம். ஸதகதுல்லாஹ் ஆகியோர் பதவி வகித்துள்ளனர்.  

தற்போது குவாஸி நீதவானாகப் பணிபுரிபவர் மௌலவி முஹம்மது இல்யாஸ் அவர்களாவர்.

கல்வி நிர்வாகத் துறையிலும் தெல்தோட்டை முஸ்லிம்கது பங்களிப்பு மகத்தானது. அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள் எனப் பல பிரிவினர் கல்வி நிர்வாகப் பணியில்  போற்றப்பட வேண்டியவர்கள். 

அதிபர்கள் :
1. அல்ஹாஜ் காதர் மீரா ஸாஹிப் காலிதின்
2. ஜனாப் எம். எம். அப்பாஸ்
3. அல்ஹாஜ் அபூ ஸாலிஹ் ஜெய்னுதீன்
4. ஜனாப் யூனுஸ் ஜெய்னுதீன்
5. ஜனாப் எம். எஸ். அப்துல் கரீம்
6. அல்ஹாஜ் எஸ். எஸ். ஷாம் நிஜாம்
7. அல்ஹாஸ் அப்துல் மஜீத் அப்துல் கபூர்
8. அல்ஹாஜ். ஏ.ஸீ. எம். இப்றாஹீம்
(உதவி ஆணையாளர்- பரீட்சைத் திணைக்களம்)
அதிபர் பதவிகளைப் போன்று பலர்  கல்விப் பணிப்பாளர்களாவும்  சேவை புரிந்திருக்கின்றனர்.

அரசியல்
தெல்தொட்டை முஸ்லிம்களது அரசியல் பாரம்பரியம் உள்;ராட்சி அரசியலிலிருந்து ஆரம்பமாகின்றது. 1930களைத் தொடர்ந்து நாட்டில் அறிமுகமாகிய டொனமூர் (னுழழெரபஅழசந) சிபார்சுகள்  முஸ்லிம்களது அரசியல் பிரவேசத்திற்கு வழிவகித்திற்று எனக்கூறமுடியும். ஹேவாஹெற்றை - ஹேவாவிஸ்ஸ கிராமசபை தெல்தொட்டை முஸ்லிம்களது அரசியல் பிரவேசத்திற்கு துணைபுரிந்திருக்கின்றது. ஆரம்பமுதல் பின்வரும் கனவான்கள் கிராமசபைகளில் அங்கத்தவர்களாகப் (ஏ. ஊ. ஆநஅடிநசள) பணிபுரிந்துள்ளதை அறியலாம்.

கனவான்களான ஜனாப்கள்:
1.முஹம்மது காஸிம்
2.இஸ்மாயில் இப்றாஹீம் ஸாஹிப்
3.இப்றாஹீம் அபூ பக்கர்
4.மீரா ஸாஹிப் இஸ்மாயில்
5.காதர்மீரா ஸாஹிப் உபைதீன்
6.உமர்தீன் ஸ{லைமான்
7.ஸெய்யித் முஹம்மத் ஹனீபா J.P.
கிராம சபை முறைக்குப் பதிலாக  1988ம் ஆண்டு அறிமுகஞ் செய்யப்பட்ட பிரதேசசபை அரசியலிலும் தெல்தோட்டை தெல்தொட்டை முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் புரிந்து வரலாறு படைத்துள்ளனர். 

அவர்களுள்,
கனவான்களான ஜனாப்கள்:
1.ஏ. எம். உவைஸ்
2.ஜே. அப்துல் ஹமீத்
3.எம். எம். ஸாதிக்
4.முஹம்மது முஹிதீன் - ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

கல்வி
தெல்தொட்டை முஸ்லிம்களது கல்விப் பயணம் அல்குர்ஆன் போதனையிலிருந்து ஆரம்பமாகின்றது. திண்ணைப் பள்ளிக்கூடங்களிலிருந்து அறிமுகமாகிய குர்ஆன் மத்ரஸாக்களின் ஆரம்ப கர்த்தாக்கள் உள்ளுர் லெப்பைகளாவர். 

தன்னலம் கருதாத லெப்பைகளது பணி இன்றும் மக்களால் நன்றிப் பெருக்குடன் நினைவு கூரப்படுவதுண்டு.
அவர்களுள்,
கனவாக்களான ஜனாப்களான:
அஹ்மத் லெப்பை (கலீபா லெப்பை)
மா. மு. நெய்னா லெப்பை
அமீர் லெப்பை
அப்துல் லெப்பைமுஹம்மது முஹிதீன் லெப்பை
(வட்டகேபொத்தையைச் சேர்ந்த இப்பெரியார் லெப்பை சேவையில் அரைநூற்றாண்டு காலம் கால் பதித்தவராவார்.)
இஸ்மாயில் லெப்பை
இப்றாஹீம் லெப்பை
ஆதம் லெப்பை
அல்ஹாஜ் உமர் லெப்பை
அப்துல் ஹமீத் லெப்பை (வனஹபுவ) - குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

சுமார் இருநூறு ஆண்டு காலம் சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்த உள்ளுர் லெப்பைகளுக்கு பிரதேசமெங்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்கள் தரீக்காக்களின் போதகர்களாவர். காதிரிய்யா, ரிபாயிய்யா ஆத்மீகப் பாசறைகளிலிருந்து பணிபுரிந்த பெருமனிதர்களுள் தென்னிந்தியா கோட்டாறுபதியைச் சேர்ந்த ஆத்மீகச் செல்வர்கள் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். அவர்களுள் அஷ்ஷெய்க் ஸ{லைமானுல் காதிரி (ரஹ்) பிரதேசமெங்கும்  அனைவராலும் அறியப்பட்டவர்களாகத் திகழ்ந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கூறுகளிலிருந்து பெரியாரின் பணி ஆரம்பமாகியிருக்கிறது.

குர்ஆன் போதனையிலிருந்து ஆரம்பமாகிய  தெல்தோட்டைப் பதியின் சன்மார்க்கக் கல்விப் பயணத்தில்  1925ம் ஆண்டுகளைத் தொடர்ந்துள்ள காலம் பொற்காலமாகப் போற்றப்படுவதுண்டு. அந்நிகழ்ச்சி குடியிருப்பைச் சேர்ந்த ஐந்து மாணவர்களின் மத்ரஸாக் கல்விப் பயணத்தோடு தொடர்கின்றது. அவர்களுள்  முதலாமவராகப் 
போற்றப்படுபவர் பிரதேசத்தின் முதலாவது மார்க்க அறிஞராக விளங்கிய மௌலவி ஏ. ஸீ. எம். யூஸ{ப் ஆலிம் அவர்களாவர். பிரதேசத்தின் சமய  கலாசாரப் பணிகளில் காத்திரமாகப் பங்கேற்ற மௌலவி யூஸ{ப் ஆலிம் அவர்கள் ஓர் அறபு ஆசிரியராகவும் மார்க்கப் போதகராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். அவரே தெல்தொட்டைப் பிரதேச மஸ்ஜிதுகளுக்குப் பெயரிட்டு அழைக்கும் மரபைத் தோற்றுவித்தவராவர்.

பிரதேசத்தின் இஸ்லாமிய கலாசார அம்சங்களில் மௌலிது, ராத்திப் போன்றன குறிப்பிடப்பட்ட பங்கை வகித்திருக்கின்றன. அவற்றுள் றபீஉல் அவ்வல் மாதம் நடைபெறும் மௌலிது மஜ்லிஸ{களைச் சிறப்பாகக் குறிப்பிடமுடியும். பிரதேசத்தின் ஆன்மிகப் பணிகளுக்குக் கட்டியம் கூர்வதாக பத்தாம் பள்ளி மஸ்ஜிதோடு  அமைந் திருக்கும் இரு இறைநேசச் செல்வர்களின் ஸியாரங்கள் விளங்குகின்றன. அவர்களுள் ஒருவர் பீர் ஸாஹிப் வலியுல்லாஹ் என அழைக்கப்படுபம் பெரியாராவார். தற்போதும் இவ்வடக்கஸ் தலங்களைத் தரிசிக்க முடிவது சிறப்பானதாகும். தெல்தேர்டையின் சன்மார்க்கக் கல்விப் பயணத்தில் 1960 - 1965 காலப்பகுதியில்  பள்ளேகம மஸ்ஜிதில் ஆரம்பி;க்கப்பட்ட அறபு மத்ரஸாவை ஒரு மைல்கல் எனக் குறிப்பிட முடியும். குறிப்பிட்ட சில வருடங்கள் மாத்திரம் மத்ரஸா செயல் பட்டதாக அறிய முடிகின்றது. அம்மத்ரஸாவின் தொடர்ச்சியே இன்று பிரசேத்திற்குப் புகழைத் தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மஹ்பலுல் உலமா இஸ்லாமியக் கல்வி நிருவனமாகும்.  அதுபோன்று தெல்தொட்டையில் குறிப்பிட்ட காலம் கள்-எலிய மகளிர் அறபுக் கல்லூரியின் கிளை மத்ரஸாவும் இயங்கி வந்ததாக அறிய முடிகின்றது. ரலிமங்கொடையில் “அல்-மத்ரஸதுல் இக்ராமிய்யா” என்ற பெயரில் சமீபத்தில் மத்றஸா ஒன்று ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது.  

மஹ்பலுல் உலமா அறபுக் கல்லூரி1960களின் ஆரம்பத்தில் தெல்தோட்டை நன்மக்களது எண்ணததில் உருவாகிய இஸ்லாமியக் கல்வி நிறுவனமாக மஹ்பலுல் உலமா அறபுக் கலாசாலை விளங்குகின்றது. 1975 ஏப்ரில் இருபதாம்ம் திகதிஇருபத்தை ந்து மாணவர்களுடன் கல்விப் பணியை ஆரம்பித்த மஹ்பலுல் உலமா இன்று அரை நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருப்பது பெருமைக்குரியதாகும்.

மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டபோது பாடங்களைத் துவக்கி வைத்த பெருமை  முன்னாள் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ. ஆர். அப்துல் ரஸ்ஸாக் ஆலிம் அவர்களைச் சாரும். மத்ரஸா இன்றைய அமைவிடத்தில் அமைக்கப்படுவதற்கும் முதலில் முன்னாள் விவாகப் பதிவாளர் கனவான் அப்துற் றஹீம் அவர்களது குடும்பத்தவர்க ளுக்குச் சொந்தமான வீட்டில் தற்காலிகமாக இயங்கி வந்திருக்கின்றது.

நாளடைவில் கண்டி - பேராதனை வீதியைச் சேர்ந்த ஹாஜ்ஜா கதீஜா உம்மா ஆப்தீன் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் மத்ரஸா செயல்பட ஆரம்பித்ததனால்,  நன்றி உணர்வு மிக்க தெல்தோட்டை மக்கள் மத்ரஸா வளாகத்தை கதீஜா கார்டன் எனப் பெயரிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளதைக் காணலாம். அப்பெண்மணி தெல்தோட்டைப் பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட கனவான் அல்ஹாஜ் எஸ். எம். அப்துல் காதிர் அவர்களது புதல்வியாவார். அன்னார் எனசல்கொல்ல மத்திய கல்லூரிக்கு ஆறு ஏக்கர் நிலத்தை அன்பளிப்புச் செய்து வரலாறு படைத்த புரவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மத்ரஸாவின் முதலாவது பிரதம முதர்ரிஸாகப் பதவி ஏற்றவர் மௌலவி ரீ. எம். அப்துல் காதிர் அவர்களாவர்.  

அவர் வழியில் பணிபுரிந்த அதிபர்கள், உஸ்தாதுகளது அர்ப்பணத்திற்கு மத்தியில் இன்று ~மஹ்பலுல் உலமா| நாடறிந்த இஸ்லாமியக் கல்வி நிறுவனமாக ஆலம் விருட்சம் போன்று எழுந்து நிற்கின்றது.  கொடையாளர்களதும்,தெல்தொட்டை நன்மக்களது அர்ப்பணிப்பில் வளர்ந்துவரும் மத்ரஸாவின் வளர்ச்சியில் ஜனாதிபதி விருது பெற்ற  புரவலர் வை. எம். இப்றாஹீம் ஹாஜியாரின் பங்களிப்பு மகத்தானதாகும்.

பாடசாலைக் கல்வி
தெல்தொட்டைக் குடியிருப்பின் பாடசாலைக் கல்வி வரலாறு நூற்றாண்டை அடைந்து கொண்டிருக்கின்றது.  

பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களிலிருந்து அதன் வரலாறு  1916ம் ஆண்டு உடகம-ரலிமங்கொடையில் ஆரம்பிக்கப்பட்ட இரு மொழிப் பாடசாலையிலிருந்து ஆரம்பமாகின்றது என்பர். அங்கு முதலில் சிங்கள - முஸ்லிம் மாணவர்கள் இணைந்து கல்வியைத் தொடர்ந்துள்ளனர். அதற்கு முதலிலும் "மொட்டாவை"  என்னும் இடத்தில்  ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் நடைபெற்று வந்ததாகப் பேசப்படும் செய்திகளும் உண்டு. 1929ம் ஆண்டு சிங்கள மொழி மூலமான போதனைப் பிரிவு பள்ளேகம - பட்டியகம சிங்களப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டதன் பின் முஸ்லிம் மாணவர்கள் ரலிமங்கொட பாடசாலையில் தொடர்ந்தும் தமிழ்மொழி மூலமாகக் கல்வியைத் தொடர்ந்துள்ளனர். அப்பாடசாலை தற்போது பட்டியகம முஸ்லிம் வித்தியாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

குடியிருப்பின் இரண்டாவது பாடசாலையாக இன்று நவோதயா பாடசாலையாக எழுந்திருக்கும் எனசல்கொள்ள முஸ்லிம் வித்தியாலயம் காணப்படுகின்றது. 1947 மே. முதலாம் திகதி துவங்கப்பட்ட பாடசாலையை நிறுவு 

வதற்காக சே. மு. ஹாஜியார் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கனவான் அப்துல் காதர் ஹாஜியார் அவர்கள் ஐந்து ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கியமை வரலாறாகும். அவரது புதல்வி ஹாஜ்ஜா கதீஜா உம்மா ஆப்தின் அவர்களும் மஹ்பலுள் உலமா அறபுக் கல்லூரி  அமைந்திருக்கும் காணியை வக்பு செய்து பெருமை படைத்தவராவார். முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களது பதவிக்காலத்தில் பாடசாலை மகாவித்தியாலய மாகத்தரமுயர்த்தப் பட்டுள்ளது. எனசல்கொள்ள வித்தியாலயத்தைத் தொடர்ந்து பிரதேசத்தில் உருவாகிய மூன்றாவது முஸ்லிம் பாடசாலை 1959. 09. 01 திகதியில்ஆரம்பிக்கப்பட்ட உடப்பிட்டிய அல்-ஹ{ஸ்னா முஸ்லிம் வித்தியாலயமாகும். அவற்றைத் தொடர்ந்து தோன்றிய பத்தாம் பள்ளி முஸ்லிம் வித்தியாலயம் கோணங்கொட முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளும் மூடப்பட்டு விட்டன. 

தெல்தொட்டை நகரில் அமைந்துள்ள முஸ்லிம் மத்திய கல்லூரி ஆரம்பத்தில் தெல்தொட்டை பௌத்த வி;காரை வளாகத்தி;ல்  துவங்கப்பட்டிருக்கின்றது. 1951ம் ஆண்டு இருமொழிப் பாடசாலையாக பௌத்த விகாரையில் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புக்கள் நாளடைவில் தெல்தொட்டை சிங்கள வித்தியாலயம், தெல்தொட்டை முஸ்லிம்  வித்தியாலயம் என இரு பிரிவாக இயங்க ஆரம்பித்துள்ளன. 1963ம் ஆண்டு முதல் தனியாக செயல்பட ஆரம்பித்த தெல்தொட்டை முஸ்லிம் வித்தியாலயம், இன்று மத்திய கல்லூரியாக உயர்ந்து நிற்பதைக் காணமுடிவது சிறப்பானதாகும்.  அதன் முதலாவது ஆசிரியராகக் கடமையேற்றவர் பிரதேசத்தின் பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் ஏ. ஜெய்னுதீன் அவர்களாவர்.

சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் தொழுகைக்காக ஒரு மஸ்ஜிதும் அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் அதிபராகப் பணிபுரிபவர் முஹம்மது முஹிதீன் முஹம்மது மன்சூர் அவர்களாவர்.

தெல்தொட்டைப்பட்டினம் ஆங்கிலேயர் வருகை யைத் தொடர்ந்து  உருவாகிய ஒரு சந்தைப் பட்டினமாகும். 

அதற்கு முதலில் பிரதேசத்தின் பிரதான சந்தைப்பட்டினமாக  கலஹா விளங்கியிருக்கின்றது. "லிட்டில் வெலி" பெருந்தோட்டத்துக்கு மத்தியில் உருவாகிய தெல்தொட்டைப் பட்டினத்தில் ஆரம்பத்தில் ஆங்கிலேயத் தோட்ட உரிமையாளர்களால் கடைகள் அமைத்து  வாடகைக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

பட்டினத்தில் முதலில்  தென்னிந்தியத் தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்ததன் பின் அதிகமான இந்தியத் தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் பட்டினத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து  உள்ளுர்வாசிகள் வர்த்தக நடவடிக்கைகளில் பங்கேற்க ஆரம்பித்ததாகக் கூறப்படுகின்றது. இந்திய வர்த்தக நிறுவனங்களுள் அமீன் ஸ்ரோர்ஸ், ஏ. எஸ். எம். வர்த்தக நிறுவனத்தார் பிரதேச வர்த்தக நடவடிக்கைகளில் காத்திரமான பங்கு வகித்தவர்களாவர்.  இன்று பட்டினத்தில் சுமார் நூற்றைம்பது  கடைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக விளங்குகின்றன. 

பட்டின மஸ்ஜிதைத் தொடர்ந்து வரிசைத்தொடராக வனஹபுவ ஜும்ஆ மஸ்ஜித், மெதகெகில மஸ்ஜிதுன்னூh,; பத்தாம்பள்ளி மஸ்ஜிதுல் ஜன்னாஹ் ஆகியன மஸ்ஜிதுகள் தோன்றியுள்ளன. குறிப்பிட்ட மஸ்ஜிதுகளுக்குப் பெயர்கள் சூட்டிய பெருமை மார்க்க அறிஞர் முஹம்மது யூஸ{ப் ஆலிம் அவர்களைச் சாரும். பத்தாம் பள்ளி மஸ்ஜித் வளாகத்துடன் இணைந்ததாக ஆத்மீகப் பெரியார்  அஷ்ஷெய்க் பீர்ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்களது அடக்கஸ்தலமும், வேறு ஒரு பெரியரின் அடக்கஸ்தலமும் காணப்படுகின்றது.  பெரி;யர்கள் பற்றிய  தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. குறிப்பிடப்பட்ட மஸ்ஜிதுகளைத் தவிர வட்டகேபொத்தையில்  ஓர் ஹனபி மஸ்ஜிதும் இருந்ததாகப் பேசப்படுவதுண்டு.
 
மஸ்ஜிதுகள்
தெல்தொட்டைப் பிரதேச மஸ்ஜிதுகள் வரலாறு ஒன்றரை நூற்றாண்டுகளையும் கடந்ததாகக் கூறப்படுவதுண்டு. 

பிரதேசத்தின் முதலாவது மஸ்ஜித் பள்ளேகமையில் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து இரண்டாவது மஸ்ஜிதாக வட்டக்கேபொத்த மஸ்ஜிதுல் அஸ்ஹர் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. மூன்றாவது மஸ்ஜிதாக பள்ளேகம மஸ்ஜித் என அழைக்கப்படும் மஸ்ஜிதுல் ஹ{ஸ்னாவைக் குறிப்பிட வேண்டும்.

சமீபத்தில் அம்மஸ்ஜித் பெருமளவு புனரமைப்புச் செய்யப்பட்டிருப்பதை அறியலாம். குடியிருப்பில் தோன்றிய நான்காவது மஸ்ஜித் ரலிமங்கொடையில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் அக்பர் ஆகும்.  அதனைத் தொடர்;ந்து உருவாகிய மஸ்ஜித் தெல்தொட்டை நகரை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வர் என்பது 
குறிப்பிடத்தக்கது.  சுமார் 800 சந்தாதாரர்களைக் கொண்ட தெல்தொட்டை நகர மஸ்ஜிதின் தலைவராக கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஸெய்யது முஹம்மத் ஹம்ஸா அவர்களாவர்.

பட்டியகம தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இறை இல்லம் ~மஸ்ஜித் துன்னூரைன்| என அழைக்கப்படுகின்றது.  சுமார் ஐம்பது குடும்பங்கள் வாழும்  பட்டியகம குடியேற்றப்பகுதி சமீப காலமுதல்  பியசேனபுர என அழைக்கப்பட்டு வருகின்றது. ஹேவாஹெற்றைத் தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்திய திருவாளர் பியசேன தென்னகோன் அவர்களை நினைவு கூர்வதாக பியசேனபுர அமைந்துள்ளது.

தெல்தொட்டை - கண்டி பிரதான வீதியோரமாக லிட்டில்வெளித் தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டிருக்கும் இறையில்லம் ~மஸ்ஜித் உமர் இப்னு கத்தாப்| தெல்தோட்டைப் பிரதேச மஸ்ஜிதுகள் வரிசையில் கடைசியாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதாகும்.

இப்பெருந்தோட்டம்  அக்காலை மத்திய பிரதேசத்தில் பெரும் புகழுடன் விளங்கிய  பெருந்தோட்ட உரிமையாளர்   கம்பளை - இல்லவத்துறையைச் சேர்ந்த புரவலர்  அல்ஹாஜ் ஓ. இஸட். ஆப்தீன் அவர்களுக்குச் சொந்தமாக விளங்கியதாகும்.  கனவான் ஓ. இஸட். ஆப்தீன் ஹாஜியார் அவர்களது புதல்வர் முஹம்மத் மஹ்ரூப் ஹாஜியார் அவர்களால் தகப்பனாரின் நினைவாக பெருந்தோட்டத்திலிருந்து அன்பளிப்புச் செய்யப்பட்ட ஏழே முக்கால் ஏக்கர் நிலத்தில் “மஸ்ஜித் உமர் இப்னு கத்தாப்”அமைக்கப் பட்டிருக்கன்றது.

தெல்தொட்டையில் முதலாவது :
ஆங்கில ஆசிரியர் -அதிபர் : அல்ஹாஜ் எம். காலிதீன்
தமிழ் ஆசிரியர் : அல்ஹாஜ் எம். கே. ஜெய்னுல் ஆப்தீன்
மௌலவி ஆசிரியர் : அப்துல் காதிர் முஹம்மத் யூசூப் ஆலிம்
மௌலவிய்யா : அப்துர் ரஹீம் மலீஹா ஸ{பைர்
பட்டதாரி :அல்ஹாஜ் ஏ. ஸீ. எம். இப்றாஹீம்,
(உதவி ஆணையாளர் - பரீட்சைத் திணைக்களம்)
கல்விப் பணிப்பாளர் : மௌலவி ஏ. ஆர். எம். அப்துர் ரஸ்ஸாக் (அரபு)
கல்விப் பணிப்பாளர் : அல்ஹாஜ். எஸ். எஸ். ஸரூக்தீன் (கணிதம்-விஞ்ஞானம்)
கல்விப் பணிப்பாளர் : ஸெய்யித் முஹம்மத் ஹம்ஸா லெப்பை(தமிழ்)
பட்டதாரி (பெண்)    : 1. யூ. எல். முனவ்வரா  2. அப்துல் காதிர் ஜரீனா
அதிபர் (பெண்) : ஷெய்கு முஹம்மத் நாகூர் உம்மா அப்துல் காதிர்
ஹஜ் கடமை நிறைவேற்றியவர் :  அல்ஹாஜ். எஸ். எம். அப்துல்  காதிர்
(சே. மு. ஹாஜியார்)
வைத்தியர் :அல்ஹாஜ். ஏ.ஸீ. எம். குவைலித்
பெண் வைத்தியர் :ஜனாபா எஸ். எம். எம். கைறுன்னிஸா
பொறியியலாளர் :அப்துல் வாஹித் கன்ஸ{ல் ஆரிப்
சமாதான நீதவான் :ஸெய்யித் முஹம்மத் ஹனீபா
மரணவிசாரணை அதிகாரி :அல்ஹாஜ். ஏ.ஸீ. எம். ஷரீப்
பொலிஸ் உத்தியோகத்தர் : ஜனாப் ரீ. என். அல்லா பிச்சை
ஜனாதிபதி விருது பெற்றவர்:

தேசகீர்த்தி அல்ஹாஜ். வை. எம். இப்றாஹீம்
பெண் ஆசிரியைகள் : 1. அப்துல் மஜீத் ஜெமீலா பீபி
2.காதிர் மீரா ஸாஹிப் ஆமினா உம்மா
3. நூர்தின் நஜிமுன்னிஸா
சிங்கள ஆசிரியர் :அல்ஹாஜ். முஹம்மத் ஸ{லைமான் முஹம்மத் கௌஸ்
நளீமிய்யா பட்டதாரி : அஷ்ஷெய்கு உமர் லெப்பை மௌஜுத்
குவாஸி நீதிபதி :கண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹ்மூத் அப்துல் லதீப்
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com


Post a Comment

Previous Post Next Post