வாக்குச் சாவடியில்!

வாக்குச் சாவடியில்!


இந்த வெயில் நேரத்திலும்
அவளை பார்க்கவே
சென்றிருந்தேன்
மடித்த காகிதத்தை 
அவளிடமே நீட்ட
பிரித்து பார்த்தவள்
வழக்கம் போல் 
மைவிழியும் 
லேசாக தடவிய லிப்ஸ்டிக்குடன் 
அந்த மென்னுதடுகள்
என்னை ஏதோ செய்ய
என்ன சொல்'வாளோ'யென
யோசிப்பதற்குள்
சிறுவயதில் 
என்னை அறியாமல் 
கவர்ந்திழுத்த 
அதே எட்டாம் வகுப்பு டீச்சர்
என் விரலில் 
கரும்'மை'யிட்டு ..ம்ம்..என்றவளை
கடந்து சென்றேன்
வாக்குச் சாவடியில்.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post