Ticker

6/recent/ticker-posts

Ad Code



இனி நடக்கப்போவது மூன்றாம் உலகப்போர்-ரஷ்யா எச்சரிக்கை


மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகி விட்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது ரஷ்யா.

கருங்கடலில் ரஷ்ய போர் கப்பல் எப்போது மூழ்கியதோ அப்போதே மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

உக்ரைன் தனது நெப்டியூன் (Neptune) ஏவுகணை மூலம் மொஸ்கோவின் கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான Moskva-ஐ அழித்ததாக உரிமை கோரியது.

எனினும் மொஸ்க்வாவில் (Moskva) வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாகவும், அதைத்தொடர்ந்து கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், அதில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்தநிலையில், ரஷ்யாவின் முக்கிய ஊடகமான ரஷ்யா 1 தொலைக்காட்சி இப்போது நடப்பது உக்ரைனுக்கு எதிரான போர் இல்லை, நேட்டோ நாடுகளுக்கு எதிரானதாக மாறிவிட்டது, அப்படியெனில், இது நிச்சயம் மூன்றாம் உலகப்போர் தான் என கூறியுள்ளது.


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments