Ticker

6/recent/ticker-posts

கவிதை!


கவிதையைப் பயிரிடும்
ஆசையில்
என் மனநிலத்தில் 
கற்பனையில் துளிர்த்த
துளிப்பாக்களை விதைத்து
என் எண்ணப் பதிவினை
நீரெனப் பாய்ச்சி வந்தேன்.

செழிப்பாக வீரியம் மிகு
விந்தைக் கவிதைகள்
செழித்து வளர்ந்தது.

நல்லநாளில்
அறுவடை முடித்து,
என் தேவைக்குப் போக
மீதமுள்ள கவிதைகளை
சந்தையில் விற்று 
விலையாக்கப்போனேன்.

என்னைப்போல்
பலரும் கவிதைகளை
சந்தையில்
குவித்து வைத்திருந்தனர்.

பலரும் கவிதைகளைப்
பயிரிட்டதில்
மகசூல் பெருகி 
விற்பனையாகாமல்
கவிதைகள் தேக்கத்திலிருப்பதை
உங்களைப் போல் நானும் 
அப்போது தான்
உணர ஆரம்பித்தேன்... ...!

பாரியன்பன்

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments