சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-1

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-1

வாழ்க்கை-கற்றுத் தரும் பாடம்
எல்லோருக்கும் அறிவுரை சொல்ல மனம் விரும்புகிறது. ஆனால், எதிலும் கற்றுக் கொள்ள மட்டும் மறுக்கிறது.

விந்தையாக உள்ளது மனநிலை. நம்மை மீறிய ஒரு சக்தி இயற்கை நமக்குக் கற்றுத் . தருவதைச் சற்றே மனம் ஊன்றிக் கவனித்தால் போதும், புரிந்தால் போதும் நம் செயல்திறன் அதிகமாவதை உணரலாம். அப்போது, நம் பார்வை விரிவடையும், ஒரு வித வெற்றி உணர்வு நம்மைப் பற்றிக் கொள்ளும். தோல்வியும், துன்பமும் நம்மை விட்டு விலகும். இல்லை ஓடிவிடும். இதனை வள்ளுவப் பேராசான் கூறும் போது,

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்த 
இடும்பை படாஅ தவர்.-(குறள்- 623) 
என்பதன் மூலம், துன்பத்தைக் கண்டு கலங்காதவர்கள், அத்துன்பத்திற்கே துன்பம் தருபவராவார் என்கிறார். 

உண்மை தான். 
அத்தகையோர் இயற்கையை உணர்ந்தவர்கள். உலகில் ஒரு சான்றாக மன நிறைவுடன் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்து காட்டியவர்கள். இதைப் புரிந்தால் நம் வாழ்க்கை நம்கையில் என்பதை உணர முடியும். தன்னம்பிக்கை துளிர்விடும். இதோ இயற்கை காட்டும் சில, பல சான்றுகள். நம்மால் முடியாதா? என வினாத் தொடுக்கும் சாட்சிகள்.

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து நிலத்தைப் பிளந்து முளைத்துக் காட்டுகிறது.!!

ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையிலும் உயிர்வாழும்மான்கள் கூட பிரச்சனைகளைச் சமாளிக்கிறது!

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையில் இருக்கும்

அவர்கள் எல்லாம் உலக வரலாற்றில் காலடித்தடம் பதித்தவர்கள் அல்லவா? சாதனை படைக்க எண்ணுபவர்கள் ஜாதகம் பார்ப்பதில்லை. வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்பார் வள்ளுவர்.

ஒரு முயற்சி நிறுத்தப்படும்போது அது தோல்வியாகிறது. அதுவே, தொடரும் போது வெற்றி ஆகிறது. முடியாதவன் போதிக்கின்றான். முடிந்தவன் சாதிக்கின்றான். 

உள்ள உறுதியுடன் கண்டால், உனக்குக் காட்சி தெரியும் , காட்சி தெரிந்தால் பாதை விரியும்,பாதை விரிந்தால் பயணம் தொடரும்,பயணம் தொடர்ந்தால் இலக்கை அடையலாம் அதற்கான வெற்றிப் பாதையில் பயணம் செய்து வெற்றியுடன் வளமான வாழ்வைப் பெறலாம். இது ஆய்விற்குரிய சிந்தனைக் கருத்தாகும்.

இன்றைய உலகம் தொழில் நுட்பத்துடன் கணினிப் புரட்சியும் கலந்த விஞ்ஞான உலகம். இதனை ஆக்க சக்திக்குப் பயன்படுத்தி உலகின் வரலாற்றில் நாமும் காலடித் தடம்பதித்து இடம்பெற வேண்டாமா?.

மற்றவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் பிறந்திருக்கும் போது உங்களுக்கு வழிகாட்ட யாரைத் தேடுகிறீர்கள்?.

உலகம் உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. திறமை மிக்கவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பதில்லை. அவர்களே சந்தர்ப்பத்தை உருவாக்குகிறார்கள். இதை மனத்திலே விதையுங்கள். விருட்சமாக வளருங்கள். எதை மனம் கற்பனை செய்கிறதோ.எதைமனம் நம்புகின்றதோ அதை அடைகிறது. அதுவாகவே மாறுகிறது.

நிலவில் தன் காலடித்தடம் பதித்தார் 'ஆம்ஸ்ட்ராங். இன்றைய மனிதன் அந்நிலவில் குடியேறி வாழத் திட்டமிடுகின்றான். அந்த அளவிற்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. அதன் வழியாக நம் திறமைகளை வளர்த்து, நாமும் முயன்று இந்த உலகில் நம் முகத்திற்கு ஒரு முகவரி ஏற்படுத்துவோம்.

அறிவின் துணை கொண்டுநாமும் முயன்றால் வரலாற்றின் வெற்றிப் பாதையில் நாமும் காலடித்தடம் பதிக்கலாம்.
(தொடரும்)

வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

1 Comments

  1. வேட்டை மின் இதழின் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளன...சிந்தனையைத் தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்...மனமார்ந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்

    ReplyDelete
Previous Post Next Post