Ticker

6/recent/ticker-posts

அயிரைப்பூக்கள்!


கண்களில் தாவுகின்ற 
பிரபஞ்சங்கள்
நீர் தெளித்து அடக்கப்படுகிறது

முனகும் அதரங்களில் 
பெருங்கடலென மாறுகின்றன 
நுரைமலர்க் கொப்பளங்கள்
 
வால்நுனிகளில் கரைந்து 
கூடையின் இடுக்குகளில்
கசியத்துவங்குகின்றன
சிறு சிறு இதயங்கள்

அன்பால் நிறைந்த 
இப்பூவுலகின் கொடூர 
நகர்வுகளில் உயிர்மணம் 
இழக்கின்றன கூடை
நிறைந்திருக்கும் 
அயிரைப்பூக்கள்!


வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

0 Comments