திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-35

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-35


குறள் 163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்.

மாப்ள.. கொஞ்சபேரு இருக்கானுவொ. அவனுவொ அறவழில எல்லாம் நடக்க மாட்டானுவொ. அடுத்தவொளுக்கு நல்லதும் செய்யமாட்டானுவொ. பிறத்தியாரு இப்படில்லாம் நடந்தா, அதைப் பாத்து பெருமைப் படமாட்டானுவொ. பொறாமைதான் படுவானுவொ மாப்ள.

குறள் 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

மத்தவொளுக்கு ஒதவி செய்ததைப் பாத்து பொறுக்காம, கொஞ்சபேரு வயிறு எரிவானுவொ. இது மோசமான குணம் மாப்ள. இந்த குணம் இருக்கவனுவ மட்டுமில்லை, அவனுவொளோட குடும்பத்துல இருக்க ஆளுங்களும் சாப்புடுத சோத்துக்கும், உடுத்துத வேட்டி சேலைக்கும் லொண்டா அடிக்கும்படி ஆயிரும். புரிஞ்சுதா மாப்ள.

குறள் 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

மாப்ள..  செலவனுவொ, ஒரு ஆளைப் பாக்கும் போது, அவொளை தலையில தூக்கி வச்சு இனிக்க இனிக்க பேசுவானுவொ. 

அந்த ஆளு அந்தப் பக்கம் போனதும்,  அவொளைப் பத்தி இல்லாததும், பொல்லாததுமா, பொறளி பேசுவானுவொ. 

இப்பிடி ஒரு மோசமான வாழ்க்கை வாழுததுக்குப் பதிலா அவனுவொல்லாம் செத்துத் தொலைஞ்சா ஊரு நல்லாருக்கும் மாப்ள. 

குறள் 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

எப்பப் பாரு.. யாரைப்  பத்தியாவது  பழி சொல்லிக்கிட்டே இருக்கவேண்டியது தான் இவனுவொ வேலை.  இவனுவொ செஞ்ச வேலைகளை ஆராய்ஞ்சு அதுல மோசமானதை கண்டுபிடிச்சு மத்தவொளும் பழி சொல்லுவாவொள்லா மாப்ள. 
(தொடரும்)

வேட்டை
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post