அமைதி இருப்பிடத்தில்தான்!

அமைதி இருப்பிடத்தில்தான்!


வீட்டில் அமைதியில்லை என்றே நினைத்தேதான்
காட்டுக்குள் ஓடினான் காட்டின் அமைதியால்
தூக்கம் தழுவ அயர்ந்தேதான் தூங்கினான்!
போற்றினான் காட்டை அன்று.

தென்றல் வருடியது! மெய்மறந்தான்! தென்றலே
வன்புயலாய் மாறி மரங்களைத் தூக்கி எறிந்தது!
எங்கும் அமளியின் ஆட்சி! அவனங்கே
தங்க முடியவில்லை பார்.

அச்சம் குடியேற தன்வீட்டை நோக்கித்தான்
எப்படியோ ஓடி அடைந்தான்! அன்பான
சுற்றமுடன் கூச்சலில் வாழ்வதே நல்லமைதி!
கற்றறிந்தான் பாடத்தை! காண்.


வேட்டை
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post