திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-37

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-37

 
குறள் 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
பேரப்புள்ள.. எப்பமும் அடக்க ஒடுக்கமா இருக்கணும். இது மட்டும் போதாது. இனிமையாவும் பேசணும். 

இந்த ரெண்டு குணம் தான் ஒருத்தனுக்கு நல்ல நகை நட்டு மாதிரி. மத்த நகை நட்டுல்லாம் நகை நட்டே கெடையாது பேரப் புள்ள. 

குறள் 178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

மருமவன...  ஒருத்தங்கிட்ட  இருக்க சொத்து சொகம்லாம் கொறையாம இருக்கணும்னா, 

என்ன செய்யணும் தெரியுமா? 

மொதல்ல அவன் அடுத்தவன் சொத்துக்கு ஆசைப் படாம இருக்கணும் மருமவன. 

குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

மருமவன.. முடிஞ்ச அளவு முயற்சி செஞ்சு ஒருத்தன் சம்பாதிக்க சொத்துல்லாம் தகுதியுடைய ஏழை பாழைகளுக்கு கொடுத்து ஒதவுவதுக்கு தான்.

குறள் 221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

கையில ஐவேசு இல்லாத ஏழைகளுக்கு அவர்களுக்கு பயன்படும் பொருள் எதாவது கொடுத்தா, அது தாம் மாப்ள உண்மையான ஈகை. வசதி படைத்தவர்களுக்கு கொடுப்பதெல்லாம் பதவியையோ, பயனோ எதிர்பார்த்துக் கொடுப்பதாத் தான் இருக்கும். 

குறள் 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.

மாப்ள.. பிறர்த்தியாரிடமிருந்து, நல்ல முறையில் எதாவது வேங்குனாலும் அது சிறப்பு இல்லை. பிறர்த்தியாருக்கு நாம எதாவது கொடுத்தா, மேலுலகம் கிடைக்கப் போவது கிடையாதுன்னாலும், கொடுக்குறதுங்கிறது சிறந்தது மாப்ள.


Post a Comment

Previous Post Next Post