சமத்துவம் பேணும் நல்லீகைப் பெருநாள்!

சமத்துவம் பேணும் நல்லீகைப் பெருநாள்!


செல்வந்தன் ஏழைக்குத் தரணியிலே தனது
சொத்தைப் பகிர்ந்தளிக்கும் ஸக்காத்
சேமநலவரி இறுக்க வந்ததொரு மாதமாம்

கல் மனங்கள் கசிந்துருகக்
கட்டாய நோன்பு ஃபித்ராக் கொடைகள்
கடைப்பிடிக்க வைத்த இஸ்லாமெனும் 
திருவேதமாம்

வண்ணமிகு ரமலானெனும் தூய மாதத்தில்
நோன்பு நிதம் நோற்றதன் பரிசாகும்
நம்பிணி தீர்க்க வந்திட்டதொரு நன்னாளாம்

உபவாசம் இருந்து மார்க்கத்தின் உறு
வாசனைகள் நுகர்ந்து உடல், உள்ளம்
சாந்தி ஏந்திடவே சேர்ந்திட்ட சோபனமாம்

அகிலத்தின் இரட்சகனாம் அல்லாஹ் எமக்கு
அண்ணல் பெருமான் மூலம் அறிவித்த
அவனியின் அழகிய நோன்புப் பெருநாளாம்

ஐம்பெரும் கடமைவரிசை தனிலே/
நான்காம் இடத்தில் மலர்ந்த/மாந்தர் 
சமத்துவம் பேணும் நல்லீகைத்திருநாள்

மனிதனின் இழியுறு இயல்புகள் மாறிட
உயர் மாண்பொடு பொதுநலம் ஊறிட
உதித்தது அருட்பெரும் திருநாள்

பொதுநலம் அடக்கம் பூமியில் இணைந்திட
மனிதப் புனிதனாய் அவனை மாற்றிட
ஷவ்வால் மாதப் பிறையிலே பூத்தது இந்நாள்


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post