கலா சமையல்

கலா சமையல்


  சோளம்  மா ஐஸ்கிரீம்  
தேவையானவை

2- நன்றாக கனிந்த மாம்பழம்
15- மேசைக் கரண்டி பால் மா 
20- மேசைக் கரண்டி சோளம்  மா
1- தேக்கரண்டி  வெண்ணிலா S.s
தேவைக்கு ஏற்ப வெள்ளைச் சீனி.
மேலே பொடி பண்ணித் தூவிட 
முந்திரி பிஸ்தா  வாதாம் இவைகளில் ஏதோ ஒன்று தேவைக்கு ஏற்ப.
ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்திட சிறுசிறு பாத்திரம்.
செய் முறை 
10- மேசைக்கரண்டி பால் மாவோடு மாம்பழத்தை சுத்தம் செய்து  .
சீனியும் சிறுதளவு சேர்த்து 
வெண்ணிலா S.s கலந்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் .
நீர் விடாமல் பின்னர்  சோளம் மாவில் 10 டம்ளர் நீர் விட்டு .
மீதம் உள்ள பால் மாவையும் 
ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து .
சுவைக்கு ஏற்ப சீனியும் சேர்த்துக் கரைத்து விட்டு அடுப்பில் கட்டி வராத வாறு கிளறவும் .கொஞ்சம் தடிப்பாக இருக்கும் போதே .
இறக்கி சூடாக இருக்கையிலே
 பாதி மாவை மாம்பழத்தோடு 
சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் .
ஊற்றி விட்டுமீதம் உள்ள மாவை
 நடுவே வெள்ளை வண்ணமாகவே ஊற்றிக் கொள்ளவும் .பின்னர் பொடி செய்த ஏதாவது ஒரு விதையை தூவி ஆறிய பின் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடவும்  .
ஒரு வாரத்துக்கு வைத்து சாப்பிடலாம். குளிர்சாதனப்பெட்டி மேலே வைக்க வேண்டாம் கீழ் பகுதியில் வைக்கவும். .

1 Comments

Previous Post Next Post