திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-40

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-40


குறள் 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

மாப்ள..  பசு ஒண்ணு புலித்தோலை போத்திக் கிட்டு புல்லை மேஞ்சுச்சுன்னா, அது புலி இல்லைன்னு சொல்லிறலாம். 

அது மாதிரி தான் மாப்ள.. கெட்ட எண்ணம் உள்ளவொ என்ன தான் நல்லவொ மாதிரி வேசம் போட்டாலும், அதை சுளுவா கண்டு பிடிச்சிறலாம். 

குறள் 279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்னவினைபடு பாலால் கொளல்.

மாப்ள.. அம்பு இருக்குல்லா.. அது நேராத் தான் இருக்கும். ஆனா அது மக்களைக் கொல்லுத அளவு மோசமானது. 

இசைக் கருவி யாழ் இருக்குல்லா.. அது கோணலா இருக்கும். ஆனா அது தருத இசை நல்லாயிருக்கும். 

அது மாதிரித் தான் மாப்ள.. நம்ம மக்களை எடை போடும் போதை, அவொளோட செயல்களை வச்சு தான் எடை போடணும். 

குறள் 280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

மாப்ள.. இந்த ஒலகத்துல உள்ள மத்தொவொ பழிக்கிறது எதையும், செய்யாம விட்டுட்டோம்னு  வச்சுக்க.

அதுக்குப் பொறவு நாம,  தலை முடியை, சடையா வளர்க்கது பத்தியோ, முழுசா செரைய்க்கது பத்தியோ கவலையே பட வேண்டாம் மாப்ள.. 

குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

மாப்ள.. அடுத்தவன் பொருளை களவாங்கும் போது நல்லாத்தான் இருக்கும். களவாண்ட பொறவு அதுனால தீராத தும்பந் தான் வந்து சேரும் மாப்ள. 

குறள் 289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.

மாப்ள.. களவாங்கிறதைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாத பயலுவொ இருக்கானுவொள்லா.. அவனுவொள்லாம், கண்டமானிக்கு களவாண்டு, அதுனாலயே அழிஞ்சு பொயிருவானுவொ மாப்ள.(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post