உலகமே வியக்கும் சீனாவின் கலாச்சாரம்

உலகமே வியக்கும் சீனாவின் கலாச்சாரம்


உலகில் பல நாடுகளில் பல விசித்திரமான கலாச்சாரங்கள் பின்பற்றப்படுவதை கேள்விப்பட்டு இருப்போம். அதன் படி சீன பின்பற்றப்படும் கலாச்சாரம் தான் உலக நாடுகளுக்கே ஆச்சரியத்தை அளிக்கிறது.

உலக மக்கள் தொகை அதிகமாக கொண்டிருக்கும் சீனாவில் அங்கிருந்து நம் நாட்டிற்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அதிகம்.

சீன பொருட்களை இன்றளவும் அதிக விற்பனையில் தான் செல்கிறது. அப்படிப்பட்ட சீனாவில் வாழும் மக்கள் சில பழக்க வழக்கங்களை கேள்விப்பட்டால் இன்றளவும் கூட இப்படி உள்ளதா என வாயடைத்துபோவீர்கள்.

அதன்படி சாப்பிடும் உணவுகளில் தான் அவர்களின் வித்தியாசம் முகம் சுழிக்க வைக்கும். ஆம் பாம்பு, பல்லி, என உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.

மற்ற நாடுகளில் அதிகம் முட்டையை நீரில் போட்டு தான் வேக வைப்பார்கள். ஆனால் சீனாவில் மட்டும் 10 வயதிற்குள் இருக்கும் சிறுவர்களின் சிறுநீரை கொண்டு வேக வைப்பார்களாம்.

அதுவும், சிறுநீரகத்தில் வேக வைத்த முட்டையி விலையும் அதிகமாக இருக்குமாம். இந்த சிறுநீரில் ஊற வைத்த முட்டைக்கு தான் அதிக சத்து உள்ளது என நம்புகிறார்கள்.

நம் நாட்டில் மாமிசம் என்றால், ஆடு, கோழி, மாட்டுக்கறி என சொல்வது உண்டு. ஆனால் சீனர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவில் ஒன்று என்றால் நாய்க்கறியாம். அதுவும், நாய் கறியை சாப்பிடுவதற்கென்று சீனாவில் ஒரு திருவிழா நடத்தப்படுகிறது.

அந்த திருவிழா அன்று லட்சக்கணக்கான நாய்கள் சீனாவில் கொள்ளப்படுகிறது. அதுவும் பூனைக்கறி என்றால் உயிராம். ஒரு பூனையை கூட அங்கு காண முடியாதாம். சிக்கினால் குழம்பில் தான் கொதிக்குமாம்.

இதெல்லாம் விட முக்கியமாக நம் நாட்டில் ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், காசு கொடுத்தோ அல்லது வாடகைக்கோ வாங்குவோம்.

ஆனால், சீனாவில்இளைஞர்கள் தங்களுக்கு பெண் தோழி வேண்டுமென்றாலும் ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்துக்கொள்வார்களாம்.

ஆனால் அந்தப் பெண்ணிடம் எந்த ஒரு தவறான வழியிலும் நடந்து கொள்ளக்கூடாது. சீனாவில் பெண் தோழியை வாடகைக்கு எடுக்க வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பண மதிப்பு படி வெறும் 5000 ரூபாய் இருந்தால் போதும் எனக்கூறப்படுகிறது.

அடுத்ததாக, சீனாவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் கருத்தரிப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்பே சீன அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்பது சட்டமாக இருக்கிறது.

ஏனென்றால் சீனாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் இந்த சட்டம். அதுவே இரண்டாவது குழந்தையாக இருந்தால் அதற்கு நிறைய கட்டுப்பாட்டு விதிகள் உள்ளது.

சீனாவில் உள்ளவர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொண்டால் அவர்கள் அரசாங்கத்திற்கு ஒரு பெரிய தொகையை கொடுக்க வேண்டும் என்பதும் சட்டமாக இருக்கிறது.

இதையெல்லாம் தவிர்த்து இன்னும் சில வினோத பழக்க வழக்கங்கள் நடைப்பெற்று கொண்டு தான் இருக்கிறது அதை இன்றளவு சீன மக்கள் பின்பற்றி வருகிறார்களாம்.


Post a Comment

Previous Post Next Post