எனது வயது 72. நான் கடந்த பல வருடங்களாக மலம் கழிப்பதில் கஷ்டங்களை எதிர்நோக்குகிறேன். மருந்துகள் பாவிக்கும்போது, மாத்திரம் ஆறுதல் கிடைக்கிறது. பின்னர் பழைய நிலைதான்.
குறிப்பாக காலை வேளையில் மலம் கழிக்க கடுமையாக கஷ்டப்பட வேண்டியுள்ளது. இதற்கான சிகிச்சை முறைகள்இருக்கிறதா?

அனேகமானோர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது ஒரு சாதாரண விடயமாகும். ஆனாலும் ஒவ்வொருவருடைய உடம்பின் சுபாவத்திற்கு ஏற்ப மலம் கழிக்கும் பழக்கம் வித்தியாசப்படலாம்.
சாதாரணமாக மலம் மென்மையான தாகவும் சற்று மஞ்சள் நிறமானதாகவும் இருந்தாலும்கூட உணவின் நிறம், சில மருந்துகள் போன்றவைகள் காரணமாக வித்தியாசப்படலாம். மலச்சிக்கல் ஏற்ப இதற்கு நார்ச்சத்துள்ள உணவு வகைகள் குறைவாக உண்பதும் போதியளவு நீர் பருகாமல் இருப்பதும் சில மருந்துகளின் பக்க விளைவுகளும் உடற்பயிற்சியின்மையுமே முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது.
தாவர உணவு வகைகள், தானிய ' வகைகள் பழ வகைகள் போன்றவற் றிலேயே நார்ச்சத்துக் கூடுதலாகக் காணப்படுகின்றன. இந்த நார்ச்சத்துள்ள உணவுகளும் நீருமே மலத்தை மென்மையாக வைத்திருப்பதன் காரணமாக சிறுகுடல், பெருங்குடலூடாக மலம் இலகுவாகச் செல்வதற்கு உதவுகின்றன.
மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் இரும்புச் சத்து மற்றும் கல்சியம் அடங். கியுள்ள மாத்திரைகள், மனநோய்க(ளுக்காகப் பாவிக்கப்படும் சில மாத் திரைகள், இருமலுக்காகப் பாவிக்கக் கூடிய சில 'சிரப்' வகைகள் மலச்சிக் கல்களை ஏற்படுத்துகின்றன. எனவே தொடர்ச்சியாக மருந்து பாவிப்பவர்கள் இது விடயமாக வைத்தியர்களின் ஆலோசனையை பெறுவது முக்கியம்.
உடற் பயிற்சியும் மலச்சிக்கலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது தினமும் 20 நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்வதன் மூலம் மலம் இலகுவாக வெளியேறுவதற்கு உதவுகின்றது. அத்துடன் வயது கூடும்போது குடலின் தசைகளின் தொழில்பாடு குறைதல் குடல் உட்புறமாச் சுருங்குதல் போன்ற நிலைகளிலும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
மேலும் ஒரு சில நோய் நிலைக ளிலும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அதில் தைரொக்சின் ஹோர்மோன் குறை பாடு என்பது ஒரு முக்கியமான விடயமாகும். எனவே தொடர்ச்சியாக மலச்சிக்கல் இருப்பவர்கள் வைத்திய ஆலோசனை பெற்று இதை நிவர்த்தி செய்து கொள்வது முக்கியம்.
பொதுவாக நீண்ட காலமாக மலச்சிக்கல் இருப்பதை விடவும் குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள மலச்சிக்கல் நிலையையே வைத்தியர்கள் கூடுத லாகக் கவனம் செலுத்துவார்கள்.
ஒரு சிலருக்கு மலச்சிக்கலும் வயிற் றோட்டமும் மாறி மாறி ஏற்படலாம். இந்நிலையும் கூடுதலாகக் கவனத்திற்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.
மேலும் ஒருவருக்கு மலச்சிக்கல் தொடர்ச்சியாகப் பல மாதங்களுக்கு இருக்குமேயானால் அது பல நோய்கள் ஏற்படக் காரணமாக இருக்கலாம். தலை வலி, களைப்பு, உடம்பிலிருந்து அசுத்த வாடை வெளியேறுதல், துர்நாற்றமுள்ள சுவாசம், மூல வியாதி, ஹேர்னியா, அஜீரணம் போன்ற நோய்கள் ஏற்படலாம்.
எனவே மலச்சிக்கள் ஏற்படாமல் தடுப்பதேமேல். இதற்காக நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி உணவு உட்கொள்வதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
விசேடமாகப் பழ வகைகள் மரக் கறி, கீரை வகைகள், தானிய வகைகள், கரட், வற்றாளை, பார்லி, ஓட்ஸ், சிவப்பு அரிசியினால் தயாரித்த சோறு போன் றவைகளையே அதிகமாக உட்கொள்ள வேண்டும். அத்துடன் பொரித்த உணவு வகைகள், அதிக கொழுப்புத் தன்மை யுடைய உணவு வகைகள், அதிகளவு வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், இறைச்சி வகைகள் கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவைகளை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
மேலும் அதிகளவு நீர் பருகுவதோடு கோப்பி, மதுபானம், அபின், கஞ்சா போன்றவைகளைப் பாவிப்பவர்கள் இவைகளைத் முற்றாகத் தவிர்க்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள விட யங்களைத் சரியாகப் பின்பற்றியும் மலச்சிக்கல் தொடர்ந்தும் இருந்தால் வைத்திய ஆலோசனை பெறுவது மேல்.
நவீன வைத்தியத் துறையில் மலச்சிக்கலுக்காகப் பாவிக்கக் கூடிய பல மத்திரைகள் உள்ளன. ஆனாலும் இவைகளைத் தொடர்ச்சியாகப் பாவிப்ப தனால் பல பிரச்சினைகள் ஏற்படலாம். - யுனானி வைத்தியத் துறையிலும் மலச்சிக்கலை போக்குவதற்கான பல சிகிச்சை முறைகள் உள்ளன.
இங்கு கேள்வி அனுப்பியிருப்ப வரும் தனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் இருப்பதாகவும் பல சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் எதுவிதப் பலனும் கிடைக்கவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். நான் மேற்குறிப்பிட்டுள்ள விடயங்களை கடைப்பிடித்து அதிகளவு நீரையும் பருகினால் இன்ஷா அல்லாஹ் சுகம் கிடைக்கும்.
இறுதியாக வாசர்களுக்கு விசேடமாக சிறு பிள்ளைகளுடைய தாய்மார்களுக்கு ஒரு செய்தியாக உங்களுடைய சிறார்களுக்கு இயற்கை உணவுகளை இயற்கை முறையில் தயாரித்துக் கொடுக்கும்படி வேண்டுகிறேன்.
பொதுவாக பிரதான உணவாக கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட பல வகையான உணவு வகைகளையே கொடுக்கின்றோம். இதுவே சிறார்களின் மலச் சிக்கலுக்கான முக்கிய காரணமாக அமைகின்றன. இது தவிர்க்கப்படல் வேண்டும்.
DR.NASEEM

0 Comments