Ticker

6/recent/ticker-posts

Ad Code



மாரடைப்பு பரம்பரை நோயா? தடுக்க என்ன வழி?

எனது வயது 22. எனது தகப்பன் மாரடைப்பு நோயினால் 41 வயதிலேயே திடீரென மரணமானார். இது அவரது குடும்ப நோய். இந்நோய் எனக்கு வராமல் தடுப்பதாயின் ஏதும் வழிகள் உண்டா ? தயவு செய்து பூரண விளக்கத்தைத் தரவும்?-இப்திகார், மாத்தளை

பதில்: குருதிச் சுற்றோட்டத் தொகுதி என்பது முழு உடம்பிற்குமான போசாக்கு ஒக்சிஜன் போன்ற அத்தி யாவசியப் பொருட்களை விநியோகிப் பதற்கான ஒரு அமைப்பாகும். இதில் இருதயம், இரத்த நாடிகள், இரத்த நாளங்கள் போன்றவைகள் முக்கிய மாகும்.

இருதயத்தை ஒரு வாகனத்தின் பெற்றோல் டாங்கிக்கு
ஒப்பிடலாம். அத்துடன் இரத்த நாடியை பெற்றோல் டாங்கியிலிருந்து தொடரும் குழாய் களுக்கு ஒப்பிடலாம். மேலும் நாம் தரக்குறைவான கலப்படம் செய்யப் பட்ட பெற்றோலைச் செலுத்தினால் பெற்றோல் டாங்கியிலிருந்து வெளி யாகும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு வாகனம் திடீரென நின்று விடும் என்பதும் எமக்குத் தெரியும். அதே போன்று பெற்றோல் வாகனத் திற்கு டீசலைப் பாவித்தாலும் இந் நிலை ஏற்படும். மேலும் வாகனத்திற்கு பெற்றோலைச் செலுத்தி தொடர்ந்தும் நிறுத்தியிருந்தாலும் காலப் போக்கில்
இந்நிலை  ஏற்படலாம். 

இதேபோன்று தான் இதயத்திற்கு இரத்தம் விநியோகிக்கும் இரத்த நாடிகளில் அடைப்பு ஏற்பட்டாலும் இருதயத்தின் தொழிற்பாடுகளில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கான முக்கிய காரணங்களாக பதனிடப்பட்ட தரக்குறைவான உணவுகள், உடற்பயிற் சியின்மை , தொடர்ச்சியாக மன அழுத் தத்துடன் கூடிய வாழ்க்கை , மாரடைப்பு குடும்ப நோயாகத் தொடர்தல் போன் றவை அமைகின்றன.

உணவு விடயத்தில் அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ஒன்றான இயற்கை உணவுகளை எமது முன் னோர்கள் உட்கொண்டதன் காரணமாக மாரடைப்பு நோய் அவர்களிடையே குறைந்த அளவிலேயே காணப்பட் டன. எனவே நாமும் இயற்கை உண வுகளையே உட்கொண்டால் உணவே எமது நோய்களுக்கு மருந்தாக அமையும் என்பதே வெளிப்படையான உண்மை .

அத்துடன் நடைப் பயணம் என்பது எமது முன்னோர்களின் நடைமுறையில் இருந்த ஒரு கவனிக்கத்தக்க விடய மாகும். ஆனால் இன்று நடைப்பயணம் என்பது எமது சமூகம் ஏற்றுக் கொள் ளாத தரக்குறைவாக எண்ணக் கூடிய ஒரு விடயம் என்பதால் நாம் நடைப் பயணத்தைத் தவிர்க்கின்றோம். நாம் சமூகத்தில் உயரிய நிலையை அடைய வேண்டும் சமூகம் எம்மை மதிக்கக் கூடிய நிலையில் எமது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற "சமூகப் போட்டி" எம்மிடம் இருப் பதோடு உடற்பயிற்சிக்கு விடை கொடுத்ததன் காரணமாக விடிவேயில் லாத மருத்துவப் பிரச்சினைகளுக்கு இன்றைய இளம் சந்ததியினர் உட்பட அனைவரும் முகம் கொடுக்க வேண்டி யிருக்கிறது.

அத்துடன் ஒரு சில நோய்கள் பரம்ப ரையாக அல்லது குடும்ப ரீதியாகவும் ஏற்படலாம். அதில் நீரிழிவு நோய், அதிக குருதி அழுத்தம், மாரடைப்பு போன்றவைகள் முக்கியமாகும். ஆனால் மேற்குறிப்பிட்டுள்ள நோயு டைய குடும்பத்தில் பிறந்த ஒருவர் அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள வியாதி தன்னையும் தாக் குமோ என்ற பேரதிர்ச்சியுடன் நோய் எப்போது ஏற்படும் எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நிச்சயமாகப் பரம்பரை நோய்கள் அவர்களைத் தாக்கத் தான் செய்யும்.

இதற்கு மாறாக பரம்பரை நோய் களை இயற்கை உணவுகளாலும் உடற் பயிற்சியினாலும் மனக்குழப்பமற்ற வாழ்க்கையினாலும் எதிர்கொள்வோம். என உறுதி கொண்டு வாழ்ந்தால் இன்ஷா அல்லாஹ் பரம்பரை நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் அல்லது பின் போடலாம்.

பரம்பரை அல்லது குடும்ப நோய் களில் மாரடைப்பு நோய் என்பது ஒரு முக்கியமான விடயமாகும். இது இளம் வயதினரின் முடக்கப்பட்ட வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் ஒரு முக்கியமான காரணமாகும். எனவே மாரடைப்பு நோய் வராமல் தடுப்ப தாயின் இந்நோய் ஏற்படுவதற்கான மேற்கூறிய காரணிகளைக் கவனத்திற் கொண்டு தனது வாழ்க்கையில் நடைமு றைப்படுத்த வேண்டும். முக்கியமாகப் புகைத்தலை முற்றாக நிறுத்துவதோடு, உடற்பருமனைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், கொலஸ்ரோலின் அளவைச் சமநிலையில் பேணுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மனநலத்தைப் பேணல், உடம்பின் தொழிற்பாடுகளைச் சமநிலையில் வைத்திருக்கக் கூடிய பழ வகைகள், மரக்கறி வகைகள், கீரைவகைகள், தானியங்கள் போன்றவைகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும்.

அத்துடன் தனது அன்றாட வேலை களில் ஈடுபடும் போது அல்லது நடக்கும்போது நெஞ்சுவலி, முச்சுக் கஷ்டம், அதிகவியர்வை, களைப்பு, சோர்வு போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவது முக்கியம்.

மேலும் வருடத்திற்கு ஒரு முறை யாவது வைத்தியப் பரிசோதனைகள் மூலம் தனது உடம்பில் மாரடைப்பு நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா எனவும் உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

இங்கு கேள்வி அனுப்பியிருக்கும் இளைஞனும் தினமும் மாரடைப்பு ஏற் படுமா என்ற ஏக்கத்துடன் இருக்காமல் நான் மேற்குறிப்பிட்டுள்ள விடயங் களை கருத்திற்கொண்டு செயற்பட்டால் இன்ஷா அல்லாஹ் சுகமாக நீடூழி வாழலாம்.

நவீன வைத்தியத் துறையில் பரம் பரையாக ஏற்படும் மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக மேற்குறிப் பிட்டுள்ள அறிவுரைகளோடு, அதிக கொலஸ்ரோல், அதிக குருதி அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாமலிருப்பதற் கான சிகிச்சை முறைகளையும் சுறுசுறுப் பான வாழ்க்கை முறைகளைக் கடைப்பி டிக்கும் படியும் வேண்டப்படுவார்கள். 

யுனானி வைத்தியத் துறையிலும் மேற்குறிப்பிட்ட நிலைக்கு பக்கவிளைவுளற்ற சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. 

இறுதியாக வாசகர்களுக்கு விசேடமாகப் பரம்பரை நோய்கள் இருக்கக் கூடிய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு செய்தியாக பரம்பரை நோய்களை எமது முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய முறைகளைக் கையாண்டு வெற்றி கொள்வோம் என வேண்டுகின்றேன்.

DR.NASEEM


Post a Comment

0 Comments