
மக்கள் புரட்சி காரணமாக கடந்த புதன்கிழமை தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இராணுவ ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார் முன்னை நாள் ஜனாதிபதி கோடாபே ராஜபக்க்ஷ .
மாலைதீவில் மக்கள் செய்த ஆர்ப்பாட்டம் , மாலைதீவுக்கான மக்களின் நெருக்குதல்கள் போன்ற காரணத்தினால் நாட்டில் இருந்து வெளியேறும்படி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வேண்டிக் கொள்ளப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டார். அவர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைவார் என செய்திகள் பரவிய போது, கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சாதாரண சுற்றுலா விசாவில் வந்திருப்பதாகவும் சிங்கப்பூர் யாருக்கும் அடைக்கலம் கொடுக்காது என சிங்கப்பூர் சுற்றுலா துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

கோடபயவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உலகம் முழுவதும் தீவிரமடைகின்றன
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை 15 நாட்களில் சிங்கப்பூரை விட்டு வெளியேறும்படி சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சிங்கப்பூரிலிருந்து சவுதி அரேபியா ஜித்தா பயணிப்பார் என்ன வாஷிங்டன் போஸ்ட் உட்பட பிரபல செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு இருந்தபோதிலும், இன்னும் அவர் ஜித்தா நோக்கி பயணிக்கவில்லை. இதற்கான காரணங்கள் வெளியாகவில்லை.
இதனால் அடைக்கலம் கோரி அவர் இந்தியாவை அணுகியதாகவும் ஆனால் அவரது கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் கோட்டாபய ராஜபக்சவுக்கு மேலும் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது.
மாலைதீவில் இருந்து அவர் வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சிங்கப்பூரில் இருந்து வெளியேறி பாதுகாப்பான நாடொன்றுக்கு செல்ல முடியாதபட்சத்தில் கோட்டா மீண்டும் இலங்கை திரும்பலாமென சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், யானை வரும் முன்னே மணியோசை வரும் முன்னே என்பதுபோல் தான் மீண்டும் இலங்கை நாட்டுக்காக பாடுபடப் போவதாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இலங்கை அரசியல் யாப்பின் படி முன்னாள் ஒருவருக்கு ஜனாதிபதி என்ற சிறப்புரிமை அவருக்கு இருப்பதால், பதவி கவில்கப்படும் ஜானாதிபதிகளின் நிலை பற்றி குறிப்பிடப்படவில்லை படவில்லை.
எனவே கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னைநாள் ஜனாதிபதி என்ற பட்டியலில் அடங்குவதால் அவருக்கு அவருக்குரிய பாதுகாப்பு மற்றும் வாகன விடு போன்ற இன்னோரன்ன வசதிகள் வரப்பிரசாதங்கள் வழங்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.


0 Comments