தோல்விகளை கண்டு துவண்டு விடாதே... தோல்வி இல்லையேல் மனிதன் சலித்து விடுவான்... வாழ்வில் உற்சாகம் காண... தோல்வியே படிக்கல்லாகும்...
எப்போதும் பகலாய் போனால்... கதிரவனின் வெப்பம் தேகம் தாங்காது... இரவு பகல் இருப்பதே மனிதன் நிம்மதி காணவே...
வரும் தோல்வி எமக்கில்லையென்றால்... வெற்றி பெறும் எண்ணம் தோன்றாது.. வெற்றி ஒன்றே வாழ்வாய் போனால்... வாழும் வாழ்வு உப்பில்லா சாதம் போல் சுவையற்று போகும்...
முள்ளினிடையே தோன்றும் ரோஜா அழகு... தோல்வியின் பின் நம்மை அடையும் வெற்றியின் வலிமையும் அழகு..
உன் உண்மை திறமை மறைந்திருப்பதை ... தோல்வி ஒன்றே வெளிகாட்டுகின்றது... கிடைப்பதெல்லாம் வெற்றியென்றால்... மறைந்திருக்கும் உன் ஆற்றல் மங்கிப்போகும்....
ஒரு தோல்வியை கண்ட பின்னே... மேலும் பல ஆற்றலை கொண்டு... அதனை வெற்றி கொள்ள துணிகிறோம்...
முதற்படியே வெற்றி கண்டால்... மனம் கூட சோர்ந்து போகும்... புது புது ஆற்றலை சிந்திக்க மறுக்கும்...
மனிதனின் தோல்வி அவனின் வெற்றிக்கு அத்திவாரமே அன்றி... அஸ்த்தமனம் அல்ல...
உள்ளம் துணிவோடு பயணித்தால்.. ஒவ்வொரு தோல்வியிலும்... பல வெற்றிகள் நிச்சயமே... உணர்ந்திடு தோழா....
0 Comments