Ticker

6/recent/ticker-posts

கோவையில் செப்டம்பர் 23,24,25 நடைபெறவுள்ள, உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தமிழ் எழுச்சி மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம்.


30-08-2022 காலை 11 மணிக்கு கோவை சிவானந்த காலனி வின்டேஜ் ஹோட்டலில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்ரமணியம் ஐயா அவர்கள் தலைமையில் கோவையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 23, 24, வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் பேரூர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தமிழ்க் கல்லுரியில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டமும் மற்றும் 25 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை 
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள தமிழ் எழுச்சி உரிமை மீட்பு மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் துரைசாமி ஐயா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் மேற்கு மண்டலத் தலைவர் தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர் பாட்சா, உ.தி.கூ.கோவை கல்வி மாவட்ட தலைவர் கலைமாமணி மு.பெ இராமலிங்கம் அவர்கள், புலவர் இரவீந்திரன் அவர்கள்,
புலவர் அப்பாவு அவர்கள், திரு கனக சுப்பிரமணி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்த தகவலை கோ மா.உ.தி.கூட்டமைப்புமற்றும் தமிழ் எழுச்சி உரிமை மீட்பு மாநாடு சார்பில் திருக்குறள் தூதர் முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments