புகைத்தல், மது அருந்துதல் மற்றும் அதிக பிஎம்ஐ போன்ற ஆபத்து காரணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் புற்றுநோய் இறப்புகளைத் தடுக்கலாம்என்று பிரிட்டிஷ் இதழான லான்செட்டின் புதிய ஆய்வு முடிவு செய்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் உலகளாவிய புற்றுநோய் இறப்புகளில் 44.4% ஆபத்தான பழக்கவழக்கங்களே காரனமாயிருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைபிடித்தல், குடிப்பழக்கம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் 34 ஆபத்து காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 33.9% புற்றுநோய்களுக்கு புகைபிடித்தல் மட்டுமே காரணமாகும்.
2019 ஆம் ஆண்டில் 23 வகையான புற்றுநோய்களால் இறந்த 10 மில்லியன் மக்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
"புற்றுநோய் இன்று மிகப்பெரும் சுகாதார சவாலாக உள்ளது, இது உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது" என்று ஆய்வின் இணை மூத்த எழுத்தாளர் கிறிஸ்டோபர் முர்ரே கூறினார்.
நோயாளிகள் வசிக்கும் நாடுகளின் இருப்பிடம் மற்றும் சமூக-மக்கள்தொகைக் குறியீட்டின் அடிப்படையில் புற்றுநோய் இறப்புக்கான காரணங்கள் மாறுபடும் என்றும் ஆய்வு முடிவு செய்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், புகைபிடித்தல், பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் மதுபானம் போன்ற காரணிகள் புற்றுநோயாளிகளின் ஆயுட்காலத்தை பெரிதும் பாதிக்கின்றன.
தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா மற்றும் சஹாரா ஆப்பிரிக்கா போன்ற நாடுகல் மிகவும் மோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.. அனைத்து பிராந்தியங்களும் சமூக மக்கள்தொகை குறியீட்டில் குறைந்த தரவரிசையில் உள்ளன.
நடத்தை காரணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கணிசமான எண்ணிக்கையிலான புற்றுநோய் இறப்புகளைத் தடுக்கும் சாத்தியத்தை அதன் முடிவுகள் சுட்டிக்காட்டினாலும், மற்ற காரணிகளை எளிதில் கையாள முடியாது என்று ஆய்வு அதன் கண்டுபிடிப்புகளில் தெரிவித்துள்ளது.
ஆரம்பகால நோயறிதல் மற்றும் பயனுள்ள சிகிச்சையை ஆதரிப்பதற்கான முயற்சிகளை இது பரிந்துரைத்தது.
Tags:
கட்டுரை