உடல் அசுத்தங்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள்!

உடல் அசுத்தங்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள்!


உடல் உள்பகுதிகளில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது உடல் ஆரோக்கியமாக இருக்க அவசியமானது. 

உடல் நச்சுக்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள் குறித்து காண்போம். 

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்த கலவையான திரிபலா சூரணம் நச்சுகளை வெளியேற்றும் சிறந்த மருந்து.

திப்பிலியை பொடியாக செய்து தேநீரில் கலந்து குடிப்பதால் ரத்தம் சுத்தம் அடையும்.

இயற்கையாக கிடைக்கும் தேனில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் உள்ளது. 

இது பாக்டீரியாவுக்கு எதிரான செயல்திறன் கொண்டது.

முருங்கை கீரை பவுடரை சூப் செய்தோ, உணவில் கலந்தோ சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

நோய் எதிர்ப்பு திறன் கொண்ட மஞ்சளை உணவில் எடுத்துக் கொள்வதால் கல்லீரல் சுத்தமடையும்.

ஆயுர்வேத பொருளான அஸ்வகந்தா ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் செரிமான சக்தியை அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து வாய் சுத்தமாகும்.

Source:webdunia


 



Post a Comment

Previous Post Next Post