47 வருட இந்திய கிரிக்கெட் ரெக்கார்டை உடைத்த நியூசிலாந்து கேப்டன்.. ரன்னே கொடுக்காமல் விக்கெட்

47 வருட இந்திய கிரிக்கெட் ரெக்கார்டை உடைத்த நியூசிலாந்து கேப்டன்.. ரன்னே கொடுக்காமல் விக்கெட்

டாகா : வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி பந்துவீச்சில் 47 வருடமாக யாராலும் உடைக்க முடியாத இந்திய பந்துவீச்சாளர்களின் சாதனையை உடைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்னே கொடுக்காமல் விக்கெட் எடுப்பது என்பது அரிதிலும், அரிதான சாதனை. இதற்கு முன் இந்த சாதனையை இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டுமே செய்துள்ளனர். இருவருமே இந்திய பந்துவீச்சாளர்கள் தான். ஒருவர் பாபு நட்கர்னி. மற்றொருவர் மதன் லால்.

1962 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாபு நட்கர்னி 6.1 ஓவர் வீசி அதில் ரன்னே கொடுக்காமல் 1 விக்கெட் வீழ்த்தினார், அவர் வீசிய ஆறு ஓவர்களும் மெய்டன் ஓவர்களாக அமைந்தது. அடுத்து 1976ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மதன் லால் அந்த காலகட்ட கிரிக்கெட் விதியின்படி ஒரு ஓவருக்கு 8 பந்துகள் கொண்ட ஓவர் கணக்கில், 4 ஓவர்கள் வீசி ரன் கொடுக்காமல் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

1976ஆம் ஆண்டிற்கு பின் இதுவரை 47 ஆண்டுகளில் எந்த பந்துவீச்சாளராலும் ரன்னே கொடுக்காமல் விக்கெட் வீழ்த்த முடிந்ததில்லை. அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் டிம் சவுத்தி. அவர் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5.2 ஓவர்கள் வீசி ரன்னே கொடுக்காமல் 1 விக்கெட் வீழ்த்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்னே கொடுக்காமல் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல் :

பாபு நட்கர்னி - இந்தியா - 6.1 ஓவர் - 1 விக்கெட் - 1962

மதன் லால் - இந்தியா - 4 ஓவர் - 1 விக்கெட் - 1976

டிம் சவுத்தி - நியூசிலாந்து - 5.2 ஓவர் - 1 விக்கெட் - 2023

இதன் மூலம் இரண்டு இந்திய பந்துவீச்சாளர்கள் மட்டுமே செய்து இருந்த சாதனையை உடைத்தார் டிம் சவுத்தி. இவர்கள் மூவரைத் தவிர நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்னே கொடுக்காமல் பந்து வீசி உள்ளனர். ஆனால், அவர்கள் விக்கெட் வீழ்த்தவில்லை. அந்த பந்துவீச்சாளர்கள் -

ஜான் கோடார்ட் - வெஸ்ட் இண்டீஸ் - 6.1 ஓவர் - 1950

விஜய் ஹசாரே - இந்தியா - 5 ஓவர் - 1951

ஜான் வார்ட்லே - இங்கிலாந்து - 5 ஓவர் - 1955

பீட்டர் ஸ்லீப் - ஆஸ்திரேலியா - 5 ஓவர் - 1986

வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டை சவுத்தி வீழ்த்திய நிலையில், வங்கதேசம் முதல் நாள் அன்று முதல் இன்னிங்க்ஸில் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருக்கிறது.

mykhel



 



Post a Comment

Previous Post Next Post