2 மாதங்களில் 9 முறை பாம்பு கடி வாங்கி உயிர் வாழும் அதிசய சிறுவன்... எங்கு இருக்கிறார் தெரியுமா?

2 மாதங்களில் 9 முறை பாம்பு கடி வாங்கி உயிர் வாழும் அதிசய சிறுவன்... எங்கு இருக்கிறார் தெரியுமா?



மிகவும் குழப்பம் நிறைந்த மற்றும் அனைவரையும் திகைக்க வைக்கும் ஒரு சம்பவத்தில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கல்புர்கி மாவட்டத்தில் உள்ள சித்தாப்பூர் தாலுக்காவில் அமைந்திருக்கும் ஹல்கத்தா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவனான பிரஜ்வால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஒன்பது முறை பாம்பு கடி வாங்கி இருக்கிறார்.
 

தொடர்ச்சியாக பாம்பு கடி பெற்றுள்ளதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியிலும், மிகுந்த வேதனையிலும் உள்ளனர். பிரஜ்வால் பாம்பின் சாபத்திற்கு ஆளானதன் காரணமாகவே இவ்வாறு நடந்து வருவதாக தற்போது அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

விஜயகுமார் மற்றும் உஷா தேவியின் மகனான பிரஜ்வால் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவர். இந்த சம்பவம் முதன் முதலாக ஜூலை மூன்றாம் தேதி அன்று பிரஜ்வால் வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நடந்தது. விளையாடிக் கொண்டிருந்த பிரஜ்வாலை பாம்பு தீண்டி விட்டதால், அவரது தந்தை உடனடியாக யோசித்து வேப்பிலை மற்றும் உப்பு பத்து போட்டு, தாமதிக்காமல் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது அவனின் உயிரை காப்பாற்ற உதவியது. இதுவே இந்த தொடர்ச்சியான சம்பவத்தின் ஆரம்ப புள்ளியாக அமைந்தது.

அடுத்த இரண்டு மாதங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒன்பது முறை பிரஜ்வாலை பாம்புகள் கடித்துள்ளன. இந்த அதிர்ச்சியூட்டும் மற்றும் வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் பிரஜ்வாலின் குடும்பத்தை நிலைகுலைய செய்தது. பாம்பு கடி நிகழ்வுகளில் இருந்து தப்பிக்க இவர்கள் தங்களது வீட்டையே சித்தாப்பூரில் உள்ள வாடி பகுதிக்கு மாற்றினர். துரதிஷ்டவசமாக, வீடு மாறிய பிறகும் பாம்பு கடியிலிருந்து பிரஜ்வாலால் தப்பிக்க முடியவில்லை.

குடும்பத்தினர் எவ்வளவுதான் முயற்சி செய்து பிரஜ்வாலை காப்பாற்றினாலும், அவரின் கால்களில் ஒன்பது வெவ்வேறு இடங்களில் பாம்பு கடித்த தடங்கள் உருவானது. ஆரம்பகால ஆறு நிகழ்வுகளின்போது, பிரஜ்வாலை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு பொருளாதார சூழ்நிலை காரணமாக உள்ளூரில் இருந்த மருத்துவர் ஒருவரின் உதவியை பிரஜ்வாலின் குடும்பம் நாடியது. இதன்பிறகு இதற்கான பதிலை தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் பிரஜுவாலின் குடும்பம் ஆன்மீக சடங்குகளில் ஈடுபட ஆரம்பித்தது நாகதோஷம் அல்லது பாம்பு சாபத்திலிருந்து பிரஜ்வாலை காப்பாற்ற பல்வேறு விதமான பூஜைகளை செய்தனர். தங்களது விவசாய நிலத்தில் ஒரு சிறிய ஆலயம் ஒன்றை அமைத்து அதனை கடவுளுக்கு அர்ப்பணிக்க கூட செய்தனர்.

பாம்பு தீண்டிய இந்த அனைத்து நிகழ்வுகளிலும் பாம்பை பிரஜ்வால் மட்டுமே கண்டிருக்கிறார் என்பது இந்த நிகழ்வின் மிக முக்கியமான அம்சமாக அமைகிறது. ஒரே ஒருமுறை மட்டும் பிரஜ்வாலின் பெற்றோர் இருட்டில் ஒளிரும் கண்களுடனான ஒரு பாம்பை கண்டதாக கூறுகின்றனர். ஒவ்வொரு நிகழ்வும் சில நாட்கள் இடைவெளி விட்டு நடந்திருக்கிறது. ஒவ்வொரு முறை பிரஜ்வால் குணமடையும் பொழுதும், அடுத்து என்ன ஆகுமோ என்ற பயத்திலேயே பிரஜ்வாலின் குடும்பம் இருந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Source:news18


 



Post a Comment

Previous Post Next Post