தென்னாப்பிரிக்க நகைச்சுவை நடிகரான ட்ரெவர் நோவாவின் What Now? என்ற "பாட்கேஸ்ட் " நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு "அச்சுறுத்தல்" பற்றி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
மைக்ரோசாப்ட், ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடு, சாம் ஆல்ட்மேன் அளிக்கப்பட புதிய பதவி, டெக்னாலஜி பயன்பாட்டில் இரு நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம், சாம் ஆல்ட்மேன் சத்ய நாடெல்லா-வுக்கு கொடுத்த வாக்குறுதி ஆகியவை கடந்த ஒரு வாரமாக ஏஐ துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த கேள்வி பில் கேட்ஸிடம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், பில் கேட்ஸ்-ன் செயற்கை நுண்ணறிவு பற்றிய பதில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்திவிட்டது. ஆம்... "நம்முடைய அன்றாடப் பணிகளின் சுமையை இயந்திரங்கள் செய்யும் போது மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை" என்று பில்கேட்ஸ் கூறினார். பில் கேட்ஸ் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது- எனது வாழ்க்கையில் 20 வருடகளுக்கு மேலாக, அதாவது 18 முதல் 40 வயது வரையில் எனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்குவதில் வெறி கொண்டு செயல்பட்டேன் (mono-maniacal).
இப்போது எனக்கு 68 வயதாகிறது. வாழ்க்கையின் நோக்கம் வேலை செய்வது மட்டுமல்ல என்பதை தான் உணர்ந்துள்ளேன். செயற்கை நுண்ணறிவு மூலம் நீங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்தால் போதும் என்ற சமூகத்தை நீங்கள் உருவாக்க முடிந்தால் அது சரியாக தானே இருக்கும் .
இன்றைய டெக் உலகில் இயந்திரங்கள், அனைத்து உணவுகளையும் பொருட்களையும் செய்ய முடியும். இதனால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. இவ்வாறு பில்கேட்ஸ் தெரிவித்தார்.
பில் கேட்ஸ் தனது முந்தைய நேர்காணல்கள் மற்றும் வலைப்பதிவுகளில் AI இன் அபாயங்கள் மற்றும் நன்மைகள் இரண்டையும் எடுத்துக்காட்டி பேசியுள்ளார். கேட்ஸ் நோட்ஸில், ஜூலை மாதம் பகிரப்பட்ட ஒரு பதிவில் AI இன் அபாயங்களைக் குறிப்பிட்டார், இதில் "AI மூலம் ஏற்படும் பாதிப்புகள் உண்மையானது, ஆனால் நிர்வகிக்கக்கூடியது" என்று தெரிவித்தார். AI மூலம் ஏற்படும் அபாயங்களில், தவறான தகவல் மற்றும் டீப்ஃபேக், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கல்வியின் தாக்கம் ஆகியவற்றை பில் கேட்ஸ் குறிப்பிட்டார். ஆனால் இப்போது ஆதரவு குரல் தந்துள்ளார்.
goodreturns
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்