
அதில் ஒன்று தான், தொப்புளில் சில துளி எண்ணெயை விட்டு தேய்த்துவிடுவதால் கிடைக்கும் அளவு கடந்த பலன்கள் ஆகும்.
இது அபத்தமாகத் தோன்றினாலும், தொப்புளில் எண்ணெய் தடவுவது மிகவும் பழமையான மற்றும் பிரபலமான நடைமுறையாகும்.
இந்த பழக்கம் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை மட்டுப்படுத்துகிறது. தொப்புளில் தடவும் எண்ணெய்கள் எதுவாக இருந்தாலும் சரி அது பயனளிக்கும். ஆனால் ஆயுர்வேத நடைமுறைகளின்படி, உட்கொள்ளும் போது இது பல ஊட்டச்சத்து பண்புகளைக் கொண்டுள்ள நெய்யே தொப்புளுக்கும் உகந்தது.
தொப்புளில் எண்ணெய் தடவினால் அது எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, கருப்பையில் உள்ள குழந்தைக்கு தேவையான அனைத்துமே, தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் பிணைப்பாக இருக்கும் தொப்புள் கொடியின் மூலமாகவே சென்று சேர்கிறது. கருவாக இருக்கும் உயிரை குழந்தையாக வளர ஊட்டமளிப்பது தொப்புள்.
நெய்யால் தொப்புளில் மசாஜ் செய்யும் போது, அதன் சத்துக்கள், ஒருவரின் உடலில் அதே பாணியில் நுழையும்.
நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தொப்புளின் பங்கு மிகவும் பெரியது. தொப்புளில் எண்ணெய் மசாஜ் செய்வது பல வழிகளில் நன்மை பயக்கும்.


0 Comments