Ticker

6/recent/ticker-posts

சேவகனின் தூக்கத்தை கலைக்க விரும்பாத மன்னர்

கலீஃபா உமர்(ரலி) அவர்கள் ஆட்சிக் காலம் இஸ்லாமிய உலகின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிறது. மதீனாவிலிருந்து நல்லாட்சி செய்த கலீஃபா அவர்களின் ஆட்சியின் போது மக்கள் பசி பட்டினி இன்றி நலமுடன் வாழ்ந்தனர். அத்தோடு உலகின் சகல பாகங்களிலும் இஸ்லாம் பரவியது. இவரின் காலத்திலேயே இலங்கையில் இஸ்லாம் பரவியதாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஒரு முறை கலீஃபா அவர்களைக் காண ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதி அவரின் இல்லத்துக்கு இரவு நேரத்தில் வந்தார். இருவரும் அலவளாவிக் கொண்டிருந்த வேளையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு எண்ணைய் இல்லாமல் அனையத் தயாரானது. அவ்வேளை கலீஃபா அவர்கள் எழுந்து சென்று விளக்கிற்கு எண்ணை ஊற்றி விளக்கைப் பிரகாசமாக எரிய வைத்தார்கள்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த பிரதிநிதி, கலீஃபா அவர்களை நோக்கி, “கலீஃபா அவர்களே விளக்கிற்கு எண்ணை ஊற்றி எரியச் செய்ய உங்கள் ஏவலாளரை ஏவியிருக்கலாமே?” தாங்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? என்றார்.

இதனை கேட்ட கலீஃபா அவர்கள் அன்பரே! பாவம் அந்த ஏவலாளர் பகலெல்லாம் உழைத்து விட்டு இரவில் நிம்மதியாக உறங்கும் வேளை நாம் ஏன் அவனின் தூக்கத்தை கலைக்க வேண்டும்? நான் விளக்கிற்கு எண்ணை ஊற்றி எரிய வைத்த போதும் உமராகத்தான் இருந்தேன். தற்போதும் அதே உமராகத்தான் இருக்கிறேன். இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்றார்

நாடாளும் மன்னரின் விளக்கத்தை கேட்ட தூதுவர் வாயடியத்துப் போனார். நாட்டின் ஆளுகைக்கு இவ்வாறான தலைவர்களன்றோ உலகிற்கு தேவை. என அவர் மனதில் எண்ணிப் பூரிப்படைந்தார்.


Post a Comment

0 Comments