இந்தியன் பிரிமியர் லீக் 2024 தொடரில் வரலாற்று சாதனையை முறியடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது, அதன் துடுப்பாட்ட வீரர் ஹென்ரிச் கிளாசனுக்கு(Heinrich Klaasen) வழங்கிய பரிசானது கிரிக்கட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு பல்வேறு பரிசில்களை வழங்கிவைத்துள்ளது.
அதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள தங்க சங்கிலி அணிவிக்கப்பட்டது.
இதன் பெறுமதி இந்திய மதிப்பில் 80 இலட்சம் என கூறப்படுகிறது. ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் களம் கண்டன.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வரலாற்றில் பதிவு செய்தது.
முன்னதாக ஆர்.சி.பி. அணி 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமையே ஐ.பி.எல். வரலாற்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டமாக காணப்பட்டது.
இந்நிலையில், குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் டிராவில் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக விளையாடி அணிக்கான ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments