வயிற்றில் உபகரணத்தை வைத்து அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சியத்தால் 5 ஆண்டுகள் அவஸ்தைபட்ட பெண்..

வயிற்றில் உபகரணத்தை வைத்து அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சியத்தால் 5 ஆண்டுகள் அவஸ்தைபட்ட பெண்..


பம்மல் கே சம்பந்தம் திரைப்பட்டத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் வரும் நடிகை சிம்ரன் கமல்ஹாசனுக்கு ஆப்பரேஷன் செய்யும்போது கமல் வயிற்றில் வாட்சை தவறுதலாக வைத்து ஆப்பரேஷன் செய்துவிடுவதாக கதை இருக்கும். இதுபோன்ற அதிர்ச்சிக்குரிய சம்பவம் கேரளா மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஹர்ஷினா இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் மகப்பேறு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே ஹர்ஷினா இரண்டு தடவை சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட ஹர்ஷினா மூன்றாவது குழந்தையையும் சீசேரியன் முறையில் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெற்றுள்ளார்.

இந்த மூன்றாவது மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு பெற்று சில மாதங்களுக்கு பின்னர் இருந்தே ஹர்ஷினாவுக்கு தொடர் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. தனக்கு சிறுநீரக கல் அல்லது புற்றுநோய் போன்ற வியாதிகள் வந்துவிட்டதோ என்று அச்சம் ஏற்பட தொடங்கியுள்ளது. ஆன்டிபயாட்டிக் மாத்திரை போட்டு வலியை சரிசெய்து கொண்டிருந்த பெண்ணுக்கு, கடந்த ஆறு மாதங்களாக சிறுநீர் கழிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடும் வலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகியபோது அவரும் சிறுநீரக கல்லாக இருக்கும் என கூறியுள்ளார். எதற்கும் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தபோது தான் அதில் பெரும் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளிவந்துள்ளது.

பெண்ணின் வயிற்றில் ஏதோ உலோகம் இருப்பது சிடி ஸ்கேனில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவமனைக்கே சென்று பெண் அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவர் வயிற்றில் இருந்து பொருள்களை பிடிக்க உதவும் forceps என மருத்துவ உபகரணம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் இருந்து பெண் உடல் நலம் மீண்டு வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில சுகாதாரத்துறை செயலாளருக்கு அவர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
SOURCE;news18

Post a Comment

Previous Post Next Post