Ticker

6/recent/ticker-posts

சமூகத்திற்க்கு முன்மாதிரியாக நடந்த காத்தான்குடி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !


இலங்கை அரசியலில் தனியுரிமை தனித்துவம் என்ற கோதாவில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் தனித்துவ கட்சிகள் காலப்போக்கில் தனிப்பட்டவர்களின்  சுய நலத்திற்காவும் சுய லாபத்திற்காகவும் சமூகத்தை ஏமாற்றி சமூகத்துக்கு துரோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் பல் இன மக்கள் சிறுபான்மையாக வாழும் இந்த நாட்டில் ஒரு தனி மனிதனுக்கு,  அல்லது ஒரு குடும்பத்திற்கு தலை மீறிய அதிகாரத்தை அள்ளி வழங்கிய 20 ஆம் திருத்தச் சட்டமூலம் மிகவும் பயங்கரமானதாகும்.

இலங்கையில் இனவாதம் விழைக்கப்பட்டு, ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம் சமூகத்தின் மீது அபாண்டங்கள் சுமத்தப்பட்டு,  இதனால் பெரும்பான்மை சமூகம் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறியூட்டப்பட்டு,   பெரும்பான்மை சமூகத்தால் கொடூரமாக முஸ்லிம் சமூகம தாக்கப்பட்டதற்கும் அநியாயம் இழைக்கப்பட்டதற்கும் முக்கிய காரணம் வழங்கப்பட்ட  அதிகார மோகம் கொண்ட தனிமனித அதிகாரமாகும்.

இவை அத்தனைக்கும் அத்திவாரமிட்ட  இருபதாம் திருத்தச் சட்டமூலத்திற்கு திருட்டுத்தனமாக ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கை வரலாற்றில் மறக்க முடியாது.

இருபதாம் திருத்தச் சட்டமூலத்திற்கு தலைவர் எதிராகவும்,  உறுப்பினர்கள் ஆதரவாகவும் ஆதரவளித்து,  பின்னர் அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை,கட்சியில் இருந்து விலக்குதல்,  பின்னர் மன்னிப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றி,பின்னர் அவர்களுக்கு பதவியும் வழங்கி முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகம் மறக்க முடியாது.

தேர்தல் ஒன்றை எதிர்நோக்கி இருக்கும் இந்நிலையில் தற்போது வேறு விதமான நடிப்புக்களையும் நாடகங்களையும் முஸ்லிம் தனியுரிமை கட்சிகள் அரங்கேற்றி வருகின்றன. 

இந்த வகையில் இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற  உறுப்பினர் இஷாக்குர் ரஹ்மான் அவர்கள் SJB கட்சிக்கு ஆதரவு வழங்க தலைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் தற்போது ஆங்காங்கே நடைபெறும் SJB மேடைகளில் ஏறி வரும் அதேவேளை காத்தான்குடியில் நடைபெற்ற SJB கட்சியின் மேடையில் ஏற ஏற்பாட்டாளர்களால் அனுமதி வழங்கப்படவில்லை.

முஸ்லிம்களை கவலை கடலில் ஆழ்த்திய ஜனாஸா எரித்தவவர்களுக்கு தமது ஊரில் இடமில்லை என திருப்பி அனுப்பப்பட்டார்.

காத்தங்குடி மக்களின்  இன் நடவடிக்கை உண்மையில் பாராட்டப்பட வேண்டும். வரவேற்கப்பட வேண்டும்.

காலங்காலமாக சமூகத்தை ஏமாற்றி சமூக உரிமைகளை விற்று சமூகத்துக்கு துரோகம் செய்து வரும் இவர்கள்
இலங்கை முஸ்லிம் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்.

காத்தான்குடி மக்களின் இச்செயலை படிப்பினையாக எடுத்து
 முழு நாட்டு முஸ்லிம் மக்களும் முஸ்லிம் சமூகத்திற்கு துரோகம் இழைக்கும் துரோகிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு  பதிலளித்த முன்னை நாள் அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களிடம் இருபதாம் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்டபோது, அவர் அளித்த பதில் விசித்திரமானது.

அதாவது " இது அரசியல் அவர்கள் இன்றி கட்சி அரசியல் செய்வது கடினம்" என பதிலளித்தார்.

அவ்வாறாயின் இவ்வாறான சமூகத் துரோகிகளின் அரசியல் முஸ்லிம் சமூகத்திற்கு தேவைதானா என்பதை  முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும்.

மேலும் இவர்களை வைத்து முஸ்லிம் தனி உரிமை அரசியல் செய்வதில் முஸ்லிம் சமூகம் நன்மை அடையுமா? சமூகத்திற்கு முன்மாதிரியான நடந்த காத்தான்குடி மக்களின் முன்மாதிரியில் பாடம் படிப்போம்.

பேருவளை  ஹில்மி




 





Post a Comment

0 Comments