
தூரமாக நின்று
நன்றியை திருப்பி செய்யும்
மூன்றாம் மனிதனைப் போல
பல் இழித்துக் கொண்டு
பார்வையை முழுமையாக்கும்
அச்சூரியனின் பக்குவ மனம்
சற்று பலூனில் நிரம்பிய நீரை
சொட்டு சொட்டாக
அருந்துவதை போல்தான் ஆகிறது....
மஞ்சள் நிற
பலூனில்
கழுத்தை இறுக்கு
வார்க்கோல் நுனி கொண்டு
சாகசத்துளைகளை
துளைக்கும் பொழுதெல்லாம்
வியர்வை நீர்த்துளிகளாக
வழியலாகிறது....
நிமிர்ந்து பார்த்திடாதவனையும்
பருக்களை சட்ட வைத்து
தாகம் தீர்த்துக்கொள்கிறது
அம்மஞ்சள் பலூன்...
தீராத
தாகம் தனை
நீரால் நிரப்பி வழிந்தாடிடும்
முகத்தோடு
வியர்வையில் முழு
தாகம் தீர்த்துக்கொள்கிறது
வெயில்....!
கவிஞர் சே கார்கவி
.gif)



0 Comments