Ticker

6/recent/ticker-posts

ஜீவனுள்ள மட்டும்!


ஜெனித்த 
சிலநொடிகளில்
வாழத் திராணியற்று
தன்னாயுளை 
முடித்துக் கொள்கிறது
நீர்க்குமிழி.

சிறுதாக்குதலையும்
எதிர்க்கொள்ள 
விழையாத 
கண்ணாடி குண்டு 
நூறாய் நொறுங்குகிறது.



தன்பலத்தை 
நிரூபிக்க வேண்டிய 
கட்டாயத்தில்
மோதிய வேகத்திற்கு
கொஞ்சம் நசுங்குகிறது
இரும்பு குண்டு.

எதையும் தாங்கும்
இதயம்
ஜீவனுள்ள மட்டும்
தொண்டைக்கும் 
வயிற்றுக்குமாய் விடாது
அலைகிறது.

- ஆக்கம் 
பாரியன்பன் நாகராஜன்
குடியாத்தம் 

Post a Comment

0 Comments