Ticker

6/recent/ticker-posts

ஹைக்கூ கவிதைகள்!-மொழிபெயப்புக் கவிதைகள்


எழுதுவார் இல்லையா
எங்கே புலவர்கள்
ஓசையிடும் ஓலைப் பனை
nobody to write
where the poets are?
the humming palm

சூரியன்
துளித் துளியாய் உருள்கிறது
தாமரை இலைகளில்
the sun
rolling up drop by drop
on lotus leaves

மூங்கில் பயிரிடுங்கள்
இசைஞனைப் புதைத்த மண்ணில்
விளையட்டும் புல்லாங்குழல்
implant bamboo
in the musician's buried soil
let the flute to grow

வழி விடுங்கள்
பாரம் சுமந்து வருகிறது
நத்தை
give way to
carrying the load
snail

பேனாவை மூடி
படுக்கச் செல்கையில்
வருகிறது கவிதை
after closing the pen
while going to bed
poetic thought is coming

புத்தரின் புன்னகை
ஆழ்ந்து நினைக்கிறேன்
அடங்குகிறது மனம்
buddha's Smile
i think deeply
subsiding mind

துறப்பவர்கள்
பெறுகிறார்கள்
புத்தரின் புன்னகை
buddha's smile
they are receiving
renouncers











அமுதபாரதி
Translated by Raju Arockiasamy

Post a Comment

1 Comments

  1. அமுதக் கவிஞரின் அருமை ஹைக்கூக்கள் எனது மொழி பெயர்ப்போடு ...
    இலங்கையிலிருந்து வெளிவரும் வேட்டை இவ்வார மின்னிதழிலில் ...
    அசத்தலாக வெளியிட்டுள்ள ஆசிரியருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் அற்புத வணக்கங்கள்!

    ReplyDelete